நடுவரைக் குறைகூறும் மேன்சிட்டி நிர்வாகி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் எட்டிஹாட் விளை யாட்டரங்கில் நேற்று நள்ளிரவு நடந்த உச்சகட்ட மோதலில் மான்செஸ்டர் சிட்டி குழு 1-2 என்ற கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் குழுவிடம் தோல்வி யைத் தழுவியது. இதையடுத்து, முதலிடத்தில் உள்ள லெஸ்டர் குழுவைவிட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்று 47 புள்ளிகளுடன் நான்காம் இடத் திற்குத் தள்ளப்பட்டது சிட்டி குழு. இந்தத் தோல்விக்கு நடுவர் மார்க் கிளேட்டன்பர்க்கின் தவறான முடிவே காரணம் என்று சிட்டி குழுவின் நிர்வாகி மேனுவல் பெலக்ரினி குற்றஞ்சாட்டினார்.

ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றி முடிய, இரண்டாம் பாதியின் ஏழாம் நிமிடத்தில் முன்னிலை பெற்றது ஸ்பர்ஸ். டேனி ரோஸ் உதைத்த பந்து சிட்டி வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கின் கையில் பட்டதாகக் கூறி ஸ்பர்ஸ் குழுவிற்கு நடுவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். அதை நழுவவிடாது கோலாக்கினார் அக்குழுவின் நட்சத்திர ஆட்டக் காரர் ஹேரி கேன். "நடுவரின் முடிவு முற்றிலும் தவறானது. பந்து ஸ்டெர்லிங்கின் முதுகிலும் பின்பு முழங்கையிலும் பட்டது. ஸ்டெர்லிங் பந்தைப் பார்க்கவும் இல்லை," என்றார் பெலக்ரினி.

ஸ்பர்ஸ் குழுவின் நட்சத்திர வீரர் ஹேரி கேன் (எண் 10) பெனால்டியின் மூலம் உதைத்த பந்து வலப்பக்கமாகவே வரும், அதைத் தடுத்து விடலாம் என்றெண்ணிய மேன்சிட்டி கோல்காப்பாளர் ஜோ ஹார்ட்டுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!