விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த பிரணிதா

கார்த்தி ஜோடியாக 'சகுனி' படத்தில் நடித்தவர் பிரணிதா. 'மாசு' படத்திலும் சூர்யாவுடன் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் அவருக்கு 23 வயது ஆகிறது. அவரது சொந்த ஊர் பெங்களூரு. நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கிறார் பிரணிதா. தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் துணிக்கடை திறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டவர், காரில் ஹைதராபாத்துக்கு திரும்பியுள்ளார். அவருடைய தனி உதவியாளர், ஓட்டுநர் தவிர மேலும் இருவர் அவருடன் அதே காரில் சென்றனர்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோத இருந்த நிலையில், காரின் ஓட்டுநர் அதை லேசாகத் திருப்ப, கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டது. நல்லவேளையாக இருக்கைப் பட்டை அணிந்திருந்ததால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் பிரணிதா. "நான் நலமாக இருக்கிறேன். கவலைப்பட எதுவுமில்லை. என் உதவியாளர் காயம் அடைந்துள்ளார். ஆனாலும், நாங்கள் எல்லோரும் பத்திரமாகவே இருக்கிறோம். உரிய நேரத்தில் ஆம்புலன்சை வரவழைத்த சாலைப் பணியாளர்களுக்கு பெரிய நன்றி," என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரணிதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!