அபாயகரமான சூழல்களைக் கண்டறியவல்ல இயந்திர நாய்

தேடி, மீட்­கும் பணி­க­ளுக்­காக வடி­வ­மைக்­கப்­பட்ட 'ரோவர்-எக்ஸ்' இயந்­திர நாய், இப்­போது அபா­ய­க­ர­மான பொருள்­கள் சார்ந்த சூழல்­க­ளைக் கையா­ளும் வகை­யி­லும் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு வரு­கிறது. இதற்­கான சோதனை நட­வடிக்­கை­கள் இவ்­வாண்டு நடுப்­ப­கு­தி­யில் நிறை­வு­றும்.

எடுத்­துக்­காட்­டாக, வேதி ஆலை­யில் வாயுக்­க­சிவு ஏற்­பட்­டால், தனது வாயு உண­ர்கருவி­யின் துணை­கொண்டு 'ரோவர்-எக்ஸ்' இயந்­திர நாயால் அத­னைக் கண்­ட­றிய இய­லும். இது தொடர்­பி­லான பாவனை நட­வ­டிக்கை மண்­டா­யில் உள்ள உள்­து­றைக் குழு நுண்­ண­றி­வு­சார் மையத்­தில் நேற்று செய்­து­காட்­டப்­பட்­டது.

வாயுக்­க­சி­வைக் கையா­ளும் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் அதற்­கு­ரிய 'ஹஸ்­மெட்' பாது­காப்பு அங்­கியை அணிந்து, வாயு­வின் செறிவை அளக்க வேண்­டும். ஆனால், ரோவர்-எக்ஸ் அத­னைச் செய்வ­தோடு, அது­குறித்த தக­வ­லை­யும் தள­பத்­திய, கட்­டுப்­பாட்டு நிலை­யத்­திற்கு அனுப்பிவிடும்.

தன்­னிச்­சை­யாக இயங்­க­வல்ல இந்த இயந்­திர நாய், வேதி ஆலை­களில் வழக்­க­மான ஆய்­வுப் பணி­க­ளை­யும் செய்யும்.

தீய­ணைப்­புக் கரு­வி­கள் உரிய இடங்­களில் உள்­ள­னவா என்­பதை உறுதிசெய்­வ­து­டன், கண்­ணுக்கு எளி­தில் புலப்­ப­டாத வகை­யில் இயல்­புக்கு மாறாக எது­வும் தெரிந்­தாலோ அல்­லது தீப்­பற்­றி­னாலோ கண்­ட­றிந்து, எச்­ச­ரித்­து­வி­டும்.

பெரிய வேதி ஆலை­களில் அள­வீடுகளைக் குறிப்பது போன்ற திரும்ப திரும்­பச் செய்­யக்­கூ­டிய பணி­க­ளை­யும் இந்த இயந்­திர நாய் செய்யும். இதனால் நேர­மும் மனி­த­வ­ள­மும் மிச்­ச­மா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!