சாலையில் நச்சரித்த மனைவியை அடித்த கணவர் கைது

பத்து பகாட்: மலேசியாவில் சாலை வரிக் கூடத்திற்கு அருகே சாலையில் மனைவியை அடித்த கணவரை போலிசார் கைது செய் துள்ளனர். திங்கட்கிழமை மாலை 7.30 மணி அளவில் தாமான் ஸ்ரீ குளு வாங்கில் உள்ள வீட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று பத்து பகாட் உதவி ஆணையாளர் டின் அஹமட் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் புகார் வந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன் னார். ஆயர் ஹித்தாம் சாலை வரி கூடத்துக்கு அருகே அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மனைவியை ‌ஷு காலை பயன் படுத்தி தாக்கியதை அந்த நபர் ஒப்புக்கொண்டதாக போலிசார் கூறினர்.

மனைவியைக் கணவர் அடிக்கும் காணொளியை கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!