‘ஒருவர் மதம் மாறினால் திருமணம் முறிந்துவிடாது’

பெட்டாலிங் ஜெயா: முஸ்லிம் அல்லாதவர் திருமணத்தில் ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழு வியதால் தானாகவே அந்தத் திருமணம் முறிந்துவிடாது என்று மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை விளக் கம் அளித்தது. இந்து மதத்தைச் சேர்ந்த எஸ். தீபா, 32, இஸ்லாமியத்தைத் தழு விய அவரது கணவர் இஸ்வான் அப்துல்லா, 33, ஆகிய இருவருக்கும் இடையிலான குழந்தைகள் பராமரிப்பு உரிமை மீதான வழக்கில் நீதிபதி ரவுஸ் ஷரீப் தலைமையிலான ஐவர் கொண்ட அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பின் 33 பக்க எழுத்துபூர்வ விளக்கம் நேற்று வெளியிடப்பட்டது. "தம்பதியர் இருவரில் ஒருவர் முஸ்லிம் மதத்தைத் தழுவினாலும் அவர்களின் மணவிலக்கு, பிள்ளை பராமரிப்பு உரிமை ஆகிய வற்றை முடிவு செய்யும் சட்ட உரிமை சிவில் நீதிமன்றங்களுக்கே உண்டு. "இத்தகைய திருமணத்தில் ஏற்படும் பிரச்சினைகள் ஷரியா நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் வராது," என்று மேல்முறையீட்டு தலைமை நீதிபதி ரவுஸ் குறிப் பிட்டார்.

"முன்னாள் கணவரும் மனைவியும் திருமணத்தின்போது இந்துக்களாக இருந்தனர். அப் போது சிவில் சட்டத்தின்படி திரு மணம் செய்துகொண்டனர். "அதனால் அவர்களுடைய மண முறிவு, குழந்தை பராமரிப்பு உரிமை ஆகியவை 1976ஆம் ஆண்டின் சட்டச் சீர்திருத்தம் (திருமணம், விவாகரத்து) கீழ் வருகிறது," என்றார் அவர். "இதனால் சிவில் திருமணத்தை ரத்து செய்யவும் அவர்களுடைய பிள்ளைகளின் பராமரிப்பு குறித்து முடிவு செய் யவும் ஷரியா நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. முஸ்லிம் சட்டப்படி நடைபெற்ற திருமணத் தில்தான் பிரச்சினைகள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ஷரியா நீதிமன்றங்களுக்கு உண்டு," என்று திரு ரவுஸ் விளக்கினார்.

மகனை வளர்க்கும் உரிமையை இழந்த எஸ். தீபா. படம்: மலேசிய இன்சைடர் இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!