தற்காப்புச் செலவினத்தை உயர்த்த சீனா திட்டம்

பெய்ஜிங்: சீனாவில் துரிதமாக செயல்படுத்தப்படும் ராணுவ சீர் திருத்தம் காரணமாக ராணுவத் தில் நிலவும் அதிருப்தி, தென் சீனக்கடல், தைவான் பற்றிய அந் நாட்டு அரசின் கவலை ஆகிய வற்றால் சீன ராணுவத்தின் செல வினத்தை இவ்வாண்டு பெரிய அளவில் உயர்த்த சீனா ஆயத்த மாகி வருகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சென்ற ஆண்டில் ஓரிலக்க வளர்ச்சியே கண்ட போதிலும் அதன் தற்காப்பு செல- வினம் 10.1% உயர்ந்தது. அதே போல் இவ்வாண்டும் தற்காப்பு செலவினம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்பில் தற்காப்பு செலவினம் இவ்வாண்டு 30% அதிகரிக்க பரிந்துரைக்கப்படும் என்று ராணுவ வட்டாரங்களில் பேச்சுவார்த்தை அடிபடுவதாக பெயர் குறிப்பிடாத சீன அதிகாரி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. எனினும், செலவின அதிகரிப்பு 30% வரை இருக்காது என கூறப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!