குன்றாத நம்பிக்கையுடன் ஜப்பானியர்: ஆவணமாகும் ஃபுக்கு‌ஷிமா பேரிடர்

சுதாஸகி ராமன்

ஐந்து ஆண்­டு­களுக்கு முன்பு ஜப்பானை உலுக்­கிய கடுமை­யான நில­ந­டுக்­க­மும் அதைத் தொடர்ந்து ஏற்­பட்ட ராட்சத சுனாமி அலை­களும் உண்டாக்­கிய சேதத்­தி­லி­ருந்து மீண்­டு­வர ஜப்­பா­னிய மக்கள் இன்றும் பாடு­பட்டு வரு­கின்ற­னர். பாதிக்­கப்­பட்ட ஜப்­பா­னின் வட­கிழக்குக் கடலோரப் பகு­தி­களில் வாழ்ந்­தவர்­களின் இன்­னல்­களை­யும் அவர்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்கையை­யும் படிப்­பினை­யா­கக் கொள்ளும் அரிய வாய்ப்பை ரிபப்­ளிக் பலதுறை தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் சிலர் அண்மை­யில் பெற்­ற­னர். இதுவரை ஜப்­பா­னி­யர்­களின் மீட்பு முயற்­சி­களுக்கு சிங்கப்­பூர் செஞ் ­சி­லுவைச் சங்கத்­தின் உதவித் திட்­டங்கள் எவ்வாறு கைகொ­டுத்­துள்­ளன என்பதை ஆவ­ணப்­படுத்த எண்ணிய சங்கம், ஒன்பது மாண­வர்­களை அந் ­நாட்­டுக்கு அனுப்­பி வைத்­தது.

ஜப்பான் இரட்டை அசம்பா­வி­தங்களின் ஐந்தாவது ஆண்­டு­ நிறைவைக் குறிக்கும் விதமாக அடுத்த மாதத்­தில் சிங்கப்­பூர் செஞ்­சி­லுவைச் சங்கம் ஏற்பாடு செய்­ய­வி­ருக்­கும் கண்­காட்­சி­யில் இந்த மாண­வர்­களின் படைப்­பு­களும் இடம்­ பெ­றும். ஜப்­பா­னில் எடுத்த புகைப்­ப­டங்களை நூலாகத் தொகுத்து அத்­து­டன் தாங்கள் தயா­ரித்த காணொ­ளியை­யும் அந்தக் கண்­காட்­சி­யில் வெளி­யி­டு­கின்ற­னர் இம்மாணவர்கள். இந்தப் பணியில் கடந்த ஓராண்டாக ஈடுபட்டு வரும் அம்மாணவர்கள் தகவல் தொடர்புத் துறையில் பயில்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் ஜப்­பா­னுக்குப் பய­ணம் மேற்கொண்ட மாண­வர்­களும் இரு விரி­வுரை­யா­ளர்­களும் மோச­மா­கப் பாதிப்­படைந்த ஃபுக்­கு­‌ஷிமா, மியாகி, இவாட்டே பகு­தி­களின் ஏழு நக­ரங்களுக்­குச் சென்று அங்கிருந்த நிலவரத்தை ஆவ­ணப்­படுத்­தி­னர்.

சோமா நகர மேயர் ஹிடெகியோ டாச்சியாவிடம் (இடது) புதிய பொது வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் குறித்து கேட்டறியும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் குழு. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!