அபாய சங்கு: டெங்கி காய்ச்சல் கோர தாண்டவம் அதிகரிக்கும்

சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அபாய சங்கு ஊதப்பட்டுள்ளது. அந்தக் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30,000த்தைத் தாண்டிவிடும் என்று செய்தயாளர்கள் கூட்டத்தில் தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. இதுவரையில் இங்கு 2013ல் தான் ஆக அதிகம் பேர். அதாவது 22,170 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

வழக்கத்துக்கு மாறாக ஜன வரியில் அதிகம் பேர் பாதிக்கப் பட்டனர். இதற்கு எல் நினோ பருவநிலை காரணமாக ஏற்பட் டிருக்கும் வெப்பமே காரணம் எனத் தெரிகிறது. இந்தப் பருவநிலையில் கொசுக்கள் முதிர்ச்சி அடைவதும் இனப் பெருக்கமும் குறுகிய காலத்திலேயே இடம்பெறும் என்று தெரிகிறது. இதோடு இப்போது DEN- 2 என்ற வகை கொசுக்களே டெங்கியை ஏற்படுத்துகின்றன. முன்பு DEN-=1 கொசு காரணமாக இந்தக் காய்ச்சல் ஏற் பட்டது. இப்படி வைரஸ் கிருமியில் மாற்றம் ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது பல ஆண்டு காலமாக இடம்பெற்றுவரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!