காஷ்மீரில் பா.ஜ.க. – பி.டி.பி கூட்டணி ஆட்சி

ஜம்மு: காஷ்­மீர் மாநி­லத்­தில் கடந்த ஆண்டு நடந்த சட்­ட­மன்றத் தேர்­த­லில் எந்தக் கட்­சிக்­கும் தனித்து ஆட்சி அமைக்­கும் அள­வுக்­குப் பெரும்பான்மை பலம் கிடைக்­க­வில்லை. இதைத் தொடர்ந்து பார­திய ஜன­தா­வும் மக்கள் ஜன­நா­யக கட்­சி­யும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்­தன. முத­லமைச்­ச­ராக மக்கள் ஜன­நா­யக கட்சி (பி.டி.பி) தலை­வர் முப்தி முகம்­மது சயீது பத­வி­யேற்­றார். கடந்த ஆண்டு இறு­தி­யில் முத­லமைச்­சர் முப்தி முகம்­மது சயீது நோய்­வாய்ப்­பட்டு மர­ணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பி.டி.பி. கட்­சி­யின் புதிய தலை­வ­ராக முப்தி முகம்­மது சயீ­தின் மகள் மெக­பூபா தேர்ந்வு செய்­யப்­பட்­டார்.

அவர் முத­லமைச்­சர் பதவி ஏற்க பாஜக ஆத­ரவு தெரி­வித்­தது. ஆனால் மத்­திய அரசு உரிய நிதி ஒதுக்­கீடு செய்­ய­வில்லை என்று கூறி மெக­பூபா முதல்­வர் பதவி ஏற்க தாம­தம் செய்­தார். பாஜக சம­ர­சம் செய்­தும் அவர் பிடி­வா­தம் நீடித்­தது. இதனால் காஷ்­மீ­ரில் கடந்த மாதம் 8ஆம் தேதி அதி­பர் ஆட்சி அமல்­படுத்­தப்­பட்­டது. மெக­பூபா பிடி­வா­தம் தொடர்ந்து நீடித்­த­தால் காஷ்­மீ­ரில் பா.ஜ.க - பி.டி.பி. கூட்டணி நீடிக்­குமா என்ற கேள்­விக்­குறி எழுந்தது. எனவே காஷ்­மீ­ரில் மீண்­டும் தேர்­தல் நடை­பெ­றக்கூடும் என்று கூறப்­பட்­டது. இந்த நிலை­யில் பாஜக, பிடிபி ஆகிய கட்­சி­களுக்கு இடையே மீண்­டும் சுமூக உறவு ஏற்­பட்­டுள்­ளது. பாஜ­க­வின் தேசிய பொதுச்­ செ­ய­லா­ளர் மாதவ் நேற்று முன் ­தி­னம் மாலை திடீ­ரென டெல்­லி­யில் இருந்து காஷ்­மீர் சென்றார்.

மாலை 5 மணிக்கு ஸ்ரீந­கர் சென்ற அவர் நேராக மெக­பூபா வீட்­டுக்­குச் சென்றார். அங்கு அவ­ரும் மெக­பூ­பா­வும் தனிப்­பட்ட முறை­யில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் அவர்­க­ளது பேச்சுவார்த்தை நீடித்­தது. 7.40-க்கு மெக­பூபா வீட்­டில் இருந்து மாதவ் புறப்­பட்­டுச் சென்றார். அவ­ரும் மெக­பூ­பா­வும் செய்­தி­யா­ளர்­களுக்­குப் பேட்­டி­ய­ளிக்க மறுத்துவிட்­ட­னர். மாதவ் - மெக­பூபா இடையே நடந்த பேச்­சு­வார்த்தை வெற்றி பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. மீண்­டும் பா.ஜ.க. - பி.டி.பி. கூட்டணி ஆட்­சியை அமைக்க மெக­பூபா தன் பிடி­வா­தத்தை கைவிட்டு சம்­ம­தித்­துள்­ள­தாக கூறப்­படு­கிறது. இதற்­கான அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு இன்­னும் ஓரிரு நாட்­களில் வெளி­யா­கும் என்று தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!