வீட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை

மெது­வடைந்து வந்த பொரு­ளி­யல், கடுமை­யான வாடகைச் சந்தை ஆகிய கார­ணங்க­ளால் வீட்டுக் கடனைக் கட்ட முடி­யா­மல் கடந்த ஆண்டு அதிக வீடுகள் ஏலத்­துக்கு வந்தன. 2014ஆம் ஆண்டு எண் ணிக்கை­யு­டன் ஒப்புநோக்க இந்த எண்­ணிக்கை கடந்தாண்டு கிட்­டத்­தட்ட 80 விழுக்­காடு அதிகம் என்று 'DTZ' ஆய்வு நிறு­வ­னம் கூறி உள்ளது. 2015ஆம் ஆண்டில் 87 வீடுகள் ஏலத்­துக்கு வந்தன. 2014ல் இந்த எண்­ணிக்கை 47 ஆக இருந்தது. சொத்துச் சந்தை வளர்ச்சி அடைந்த 2012ல் வீட்­டுக்­க­டன் கட்ட முடி­யா­மல் ஏலத்­துக்கு வந்த வீடு­களின் எண்­ணிக்கை ஒன்பது மட்டுமே. கடந்தாண்­டில் அதிக வீட்டு உரிமை­யா­ளர்­கள் வீட்டை விற்க வேண்டிய நெருக்­கடி ஏற்­பட்­டது. 2014ஆம் ஆண்டில் 77 ஆக இருந்த அந்த எண்­ணிக்கை 2015ல் 135ஆக உயர்ந்தது.

சென்றாண்டு அதிக தரை வீடுகள், பெரிய அடுக்­கு­மாடி வீடுகள் ஏலப் பட்­டி­ய­லி­டப் பட்டன என்று 'DTZ' ஆய்வு நிறு­வ­னம் தெரி­வித்­தது. 2014ஆம் ஆண்டில் 39ஆக இருந்த ஏலப் பட்­டி­ய­லி­டப்­பட்ட தரை வீடு­களின் எண்­ணிக்கை 2015ல் 53ஆக உயர்ந்தது. 2,000 சதுர அடிக்­கும் அதிக பரப்­ப­ளவு கொண்ட அடுக்கு மாடி வீடு­களின் எண்­ணிக்கை 17ல் இருந்து 40ஆக உயந்­துள்­ளது. பங்குச் சந்தை­யின் ஏற்ற இறக்கங்களால் மேலும் அதிக வீடுகள் ஏல விற்­பனைக்கு வரும் என்று 'DTZ' ஆய்வு நிறு­வ­னம் கூறியது. "பங்குச் சந்தை­யின் நில­வ­ரப் படி ஏற்ற இறக்­கங்கள் கார­ண­மாக வீட்டு உரிமை­யா­ளர்­கள் தங்கள் நிதி நிலையைச் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தால், மேலும் அதிக வீடுகள் ஏலத்­துக்கு வரும். "இதனால் வீடு வாங்க முயல்­வோ­ருக்கு கட்­டுப்­ப­டி­யா­கும் விலையில் அதிக வீடுகள் கிடைக்க வாய்ப்­புண்டு," என்று அந்­நி­று­வ­னத்­தின் ஆய்வுத் தலைவர் டாக்டர் லீ நைஜியா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!