விபத்து: சிடிஇ-யில் மோசமான போக்குவரத்து நெரிசல்

மத்திய விரைவுச்சாலையில் கேர்ன்ஹில் சுரங்கப்பாதைக்கு முன்பு நேற்றுக் காலை பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்ததால் அங்கு மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புக்கிட் தீமா நுழைவாயிலுக்குப் பிறகு இந்த விபத்து நேர்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்றுக் காலை 9.50 மணி அளவில் டுவிட்டர் மூலம் தெரிவித்தது. தடம் 1, 2 ஆகியவற்றைத் தவிர்க்கும்படி அது வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டது.

காலை மணி 10.13 அளவில் அங் மோ கியோ அவென்யூ 5 நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இரண்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைத்தது. விபத்தில் காயமடைந்த இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!