சிங்கப்பூர்-எஸ்டோனியா தற்காப்பு ஒப்பந்தம்

சிங்­கப்­பூ­ரும் வட ஐரோப்­பிய நாடான எஸ்­டோ­னி­யா­வும் அவற்­றுக்கு இடை­யி­லான தற்­காப்பு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த இணக்­கம் கண்­டுள்­ளன.

எஸ்­டோ­னியா, லாட்­வியா ஆகிய நாடு­க­ளுக்கு ஐந்து நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் (படம்) நேற்று முன்­தி­னம் எஸ்­டோ­னி­யத் தலை­ந­கர் டாலின் சென்­ற­டைந்­தார்.

அந்­நாட்­டுத் தற்­காப்பு அமைச்­சர் கல்லே லானெட்­டு­டன் இணைந்து இரு­த­ரப்புத் தற்­காப்பு உற­வு­களை மேம்­ப­டுத்­தும் புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் அவர் நேற்று கையெ­ழுத்­திட்­டார்.

தற்­காப்­புக் கொள்கை, தற்­காப்­புத் துறை­யி­ன­ருக்­கான பயிற்சி, தேசி­யச் சேவை, இணை­யப் பாது­காப்பு, முழு­மைத் தற்­காப்பு உள்­ளிட்ட துறை­களில் வலு­வான தற்­காப்பு ஒத்­து­ழைப்­புக்கு இந்த உடன்­ப­டிக்கை வழி­வ­குக்­கும்.

இரு அமைச்­சர்­களும் உல­க­ளா­விய, வட்­டா­ரப் பாது­காப்பு மேம்­பாடு குறித்­தும் கலந்­து­ரை­யா­டி­யதாகக் கூறப்பட்டது.

எஸ்­டோ­னிய இணை­யப் பாது­காப்பு வல்­லு­நர்­க­ளை­யும் 'நேட்டோ' இணை­யத் தற்­காப்பு நிலைய நிபு­ணர்­க­ளை­யும் அவர் சந்­தித்­தார்.

டாக்­டர் இங் இன்று எஸ்­டோ­னி­யப் பிர­த­மர் கஜா கல்­லா­சைச் சந்­திப்­பார். நாளை அவர் 15ஆவது லென்­னார்ட் மெரி கருத்­த­ரங்­கில் உரை­யாற்­று­வார். பாது­காப்பு, வெளி­யு­ற­வுக் கொள்கை தொடர்­பான வரு­டாந்­த­ரக் கருத்­த­ரங்கு இது.

பின்­னர் லாட்­வி­யத் தலை­ந­கர் ரிகா­விற்­குச் சென்று அந்­நாட்­டுத் தலை­வர்­கள், அதி­கா­ரி­க­ளைச் சந்­திக்­கும் அமைச்­சர் இங், தற்­காப்பு ஆய்வு நிலை­யங்­க­ளைப் பார்­வை­யி­டு­வார். டாக்டர் இங்கின் பயணம் வரும் செவ்­வாய்க்­கி­ழ­மை­வரை நீடிக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!