இரு காவல் நிலையங்களில் தாக்குதல்

புது­டெல்லி: டெல்­லி­யி­லும் பீகாரிலும் நிகழ்ந்த இரு வெவ்­வேறு சம்­ப­வங்­களில் காவல் நிலையங்கள் தாக்­கப்­பட்­டன.

கடந்த புதன்­கி­ழமை கிழக்கு டெல்­லி­யின் ஷாதரா பகுதி காவல் நிலை­யத்­துக்­குள் புகுந்த ஆட­வர் மூன்­றா­வது மாடி­யில் பணி­யில் இருந்த ஐந்து காவலர்­களை கத்­தி­யால் தாக்­கி­னார். அப்­போது காவல் நிலை­யத்­தில் 20 பேர் இருந்­த­னர்.

சம்­ப­வத்­தன்று அந்த ஆட­வர் திடீ­ரென காவல் நிலை­யத்­துக்குள் நுழைந்து தமது கேம­ரா­வில் படம்­பி­டிக்­கத் தொடங்க, அங்கிருந்த காவ­லர்­கள் தடுத்­துள்­ள­னர். அப்போது தன்­னி­டமிருந்த கத்­தியால் தாக்­கத் தொடங்கினார்.

பின்­னர் அங்­கி­ருந்து அவர் தப்­பி­யோட முயன்­ற­போது, காவ­லர்­கள் துரத்­திச் சென்று பிடித்­த­னர்.

இதற்­கி­டையே, பீகார் மாநி­லத்­தில் உள்ள தோஸ்­தி­யான் என்ற கிரா­மத்­தில் மது அருந்­து­விட்டு ரகளை செய்­த மூன்று பேரைக் காவல்துறை கைது செய்தது.

ஆனால் இர­வில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்­ந­ட­வ­டிக்­கை­யால் ஆவே­ச­ம­டைந்த கைதா­ன­வர்­க­ளின் குடும்­பத்­தா­ரும் உற­வி­னர்­களும் அங்­குள்ள காவல் நிலை­யத்­துக்கு திரண்டு சென்று கற்­களை வீசி­யதுடன் கம்­பு­க­ளால் காவ­லர்களைத் தாக்­க­வும் செய்­த­னர். இதில் 19 காவ­லர்­கள் காய­ம­டைந்­த­னர். 55 பேர் மீது வழக்குப் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!