ஆப்கானிஸ்தானில் மீட்பு நிறுத்தம்

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னில் நிகழ்ந்த நில­ந­டுக்­கத்­தில் மாண்டவர்­க­ளின் எண்­ணிக்கை ஆயி­ரத்­தைத் தாண்­டி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் இனி­யும் ஒரு­வரை உயி­ரு­டன் மீட்­பது அரிது என்­ப­தால் தேடி மீட்­கும் பணி­கள் முடி­வுக்கு வந்­துள்­ளன என்று நாட்­டின் மூத்த அர­சாங்க அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

மருந்­து­கள், மற்ற முக்­கிய உதவிப் பொருட்­கள் போது­மான அள­வில் இல்லை என்று அவர் சொன்­னார்.

நில­ந­டுக்­கத்­தில் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,036க்கு அதி­க­ரித்­துள்­ளது.

இந்த எண்­ணிக்கை இன்­ன­மும் உய­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்று ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான 'யுனி­செப்' பிர­தி­நிதி முஹ­மட் அயோயா தெரி­வித்­தார். பல இடங்­களில் கிரா­மங்­கள் முற்­றி­லும் அழிந்தன. உயிர் பிழைத்­த­வர்­க­ளுக்கு உணவு, குடி­நீர், தங்குமி­டம் இல்ைல. ஏறக்­கு­றைய 2,000 பேர் காயம் அடைந்­த­னர்.

10,000க்கும் மேற்­பட்ட வீடு­கள் முழு­மை­யா­கவோ ஒரு பகுதியோ சேத­ம­டைந்­துள்­ளன என்று பேரி­டர் நிர்­வாக அமைச்­சின் பேச்­சா­ளர் முஹ­மட் நஸிம் ஹக்­கானி தெரி­வித்­தார்.

கடந்த புதன்கிழமை காபூ­லின் தென்­கி­ழக்­கில் 160 கி.மீட்­டர் தொலை­வில் உள்ள வட்­டா­ரங்­களை 6.1 ரிக்­டர் நில­ந­டுக்­கம் தாக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!