காலிறுதிக்குள் நுழைந்த எவர்ட்டன் குழு

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காலிறுதிச் சுற்றுக்கு எவர்ட்டன் குழு தகுதி பெற்றுள்ளது. போர்ன்மத் குழுவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அக்குழு 2=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. இதன் விளைவாக எஃப்ஏ கிண்ணத்தை நோக்கி அதன் பயணத்தை எவர்ட்டன் குழு மிகுந்த முனைப்புடன் தொடர்கிறது. எவர்ட்டன் குழு ஆகக் கடைசியாக 1995ஆம் ஆண்டில் எஃப்ஏ கிண்ணத்தை வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு குழுக்களின் கோல் முயற்சிகள் பலனளிக் கவில்லை. போர்ன்மத் குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியபோதிலும் கோல் போடும் பொன்னான வாய்ப்பை அது கோட்டை விட்டது. பெனால்டி மூலம் போர்ன்மத் குழுவின் சார்லி டேனியல் அனுப்பிய பந்தை எவர்ட்டன் கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார். இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது. இடைவேளையின்போது எவர்ட்டன் நிர்வாகி தமது வியூகத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்தார். இந்த மாற்றம் கைமேல் பலனளித்தது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் எவர்ட்டனின் மத்திய திடல் ஆட்டக்காரர் ராஸ் பார்க்லி அனுப்பிய பந்து போர்ன்மத் குழுவின் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.

போர்ன்மத் கோல்காப்பாளரைக் கடந்த வலைக்குள் செல்லும் பந்து. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!