சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்து

நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அமைப்பினர் அணுக்கமான கண் காணிப்பைத் தொடருவர் என்றும் அதே வேளையில் பள்ளிகள், வணிக வளா கங்கள் போன்ற எளிய இலக்குகளைப் பயங்கரவாதிகள் குறிவைப்பது அதி கரித்து வரும் நிலையில் எல்லா இடங் களையும் அவர்களால் பாதுகாக்க இயலாது என்றும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார். ஆகையால், சிங்கப்பூரர் அனைவரும் அதிகமான பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தங்களது சுற்றுப்புறத்தில் விழிப்பாக இருந்து, சந்தேகத்துக்கிடமான பொருட்களை, மனிதர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் திரு டியோ வலியுறுத்தினார்.

அத்துடன், இக்கட்டான தருணங் களை எதிர்கொள்வது பற்றியும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார் தேசிய பாதுகாப்பு ஒருங்கி ணைப்பு அமைச்சருமான திரு டியோ. சில நேரங்களில், பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்படும் விளைவு களைக் குறைக்கும் வகையில் முக்கிய மான சில நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்ற அவர், அப்படிச் செய்வதன் மூலம் பயங்கரவாதி திட்டமிட்டதை எல்லாம் செய்யவிடாமல் தடுத்து, உயிரிழப்பு போன்ற பாதிப்புகளைக் குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டார். ஜூரோங் தீவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த குடிமக்கள் படையினரை நேற்று அவர் சந்தித்தார். அவருடன் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஓங் யி காங், ராணுவத் தலைவர் மெல்வின் ஓங் மற்றும் ராணுவ உயரதிகாரிகளும் சென்றிருந்தனர்.

ஜூரோங் கண்காணிப்புக் கோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படைவீரர்கள் சசீந்திரன் நீலமேகம், 30 (இடமிருந்து 2வது), சியா யோங் குவான், 38, ஆகியோரைச் சந்தித்து உரையாடிய துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (இடமிருந்து 3வது), தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஓங் யி காங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!