இந்தியரிடம் நீரிழிவு கட்டுப்பாடு மோசமாக இருக்கும் ஆபத்து

இந்திய, மலாய் இனத்­த­வர்­களி­டம் நீரிழிவு நோய் கட்­டுப்­பாடு மோசமாக இருக்­கும் ஆபத்து உள்­ளதை­யும் ஆய்வு காட்­டு­கிறது. புதிதாக அடை­யா­ளம் காணப்­பட்ட டைப் 2 வகை நீரிழிவு நோயா­ளி­கள் ஆரம்பத்­தில் தங்க­ளது உடல்­நிலையை நன்கு கவ­னித்­தா­லும் மூன்றாண்­டு­களுக்­குப் பிறகு, அவர்­களி­டம் நோய் பரா­ம­ரிப்பு குறைந்து விடு­வ­தாக அண்மைய ஆய்வில் தெரிய வந்­துள்­ளது. இன்­சு­லின் மருந்தைத் தொடர்ந்து எடுக்­கும் பழக்­கம் பல­ருக்கு இல்­லா­தது இதற்குக் கார­ண மாக இருக்­க­லாம் என்று சிங் ஹெல்த் பலதுறை மருந்த­கங் களின் ஆய்வுப் பிரிவுக்கான இயக்­கு­நர் டாக்டர் டான் நியாம் சுவான் தெரி­வித்­தார்.

டைப் 2 வகை நீரிழிவு நோயா­ளி­கள் நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க மருந்தையே சார்ந்­துள்­ள­னர். எனினும் காலப்­போக் ­கில் மருந்­தினால் நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க முடியாத நிலையை பலர் எட்­டு­கின்ற­னர். அப்போது இன்­சு­லின் தேவைப் ­படு­கிறது. "இன்­சு­லின் பயன்­படுத்­தத் தொடங்­கினால் அதோடு தங்கள் வாழ்க்கையே முடிந்து விடு­வ­தாக பலர் கரு­து­கின்ற­னர். உண்மை­யில் நீரிழிவு நோய் சிகிச்சை­யில் இன்­சு­லின் ஒரு பகு­தி­யாக உள்ளது," என்றார் டாக்டர் டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!