முன்னுதாரண மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய இந்தியப் பிரதமர்

முன்னுதாரண மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய இந்தியப் பிரதமர் என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் இந்தியாவில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப்பதை இன்றும் காணலாம். இந்த நிலையை மாற்றி இந்தியாவைத் தூய்மையான நாடாக மாற்றும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியால் 'தூய்மை இந்தியா' எனும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. அந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி ஒருவர், தாம் வளர்த்த ஆடுகளை விற்று தமது வீட்டில் கழிவறை கட்டியிருப்பதைப் பெரிதும் பாராட்டினார் பிரதமர் மோடி. ராஜந்த்கான் மாவட்டம், குருபாத் கிரா மத்தில் நேற்று முன்தினம் நடந்த 'கிராம நகர்ப்புற இயக்கம்' எனும் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அப்போது, திருவாட்டி குன்வர் பாய் எனும் அம்மூதாட்டியை மேடைக்கு அழைத்து கௌரவித்த மோடி, அவரது காலிலும் விழுந்து வணங்கினார்.

தாம் வளர்த்த ஆடுகளில் சுமார் பத்து ஆடுகளை விற்று தமது வீட்டில் இரு கழிவறைகளைக் கட்டினார் அந்த மூதாட்டி. பின்பு, தம் கிராமத்தினர் அனைவரையும் வரவழைத்து தம் வீட்டில் கட்டப்பட்ட கழி வறைகளைக் காட்டி வீடுகளில் கழிவறை இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத் துரைத்தார். இன்று, அந்தச் சிற்றூரில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை உள்ளது. "நகர்ப்புறத்தில் இருந்து வெகுதொலை வில் இருக்கும் இந்தச் சிற்றூரில் வசித்து வரும் இந்த 104 வயது மூதாட்டி தொலைக் காட்சி பார்ப்பதும் இல்லை, செய்தித்தாள் படிப்பதும் இல்லை. ஆனாலும், தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சமான கழிவறை அமைப்பது எனும் செய்தி எப்படியோ இவரைச் சென்றடைந்துள்ளது," என்று புகழ்மாலை சூட்டினார் மோடி. இந்தியாவின் ஆணிவேராகத் திகழும் கிராமங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்ற அவர், திருவாட்டி குன்வர் பாயின் கதை எல்லாருக்கும், குறிப்பாக இளையர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதால் அதை நாடு முழுக்க பரப்பும்படி ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டியதோடு தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை மற்றோருக்கும் எடுத்துரைத்த 104 வயது மூதாட்டி திருவாட்டி குன்வர் பாயின் காலில் விழுந்து வணங்கும் இந்தியப் பிரதமர் மோடி. காணொளிப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!