புதிய ரேடார் சாதனத்தை சீனா நிறுவக்கூடும்

வா‌ஷிங்டன்: சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகளில் புதிய நவீன ரேடார் முறையை சீனா ஏற்படுத் தக்கூடும் என்று அமெரிக்க ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. அதற்கான பணியில் சீனா ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதை அண்மையில் எடுக்கப்பட்ட துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக அந்த ஆய்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது. தென்சீனக் கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா அதன் கோரிக்கையை வலுப் படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் சீனா தற்போது ஸ்பிராட்லி தீவுகளில் ஏற்படுத்தி வரும் புதிய ரேடார் வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைய வுள்ளதாக துணோக்கோளப் படங்கள் காட்டுவதாக அந்த ஆய்வும் கழகம் தெரிவித் துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு சுமார் 210,500 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கி யிருப் பதாகவும் ஆய்வுக் கழக அறிக்கை தெரிவித்தது. செயற்கைத் தீவின் வடக்குப் பகுதியில் இரு ரேடார் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ள தாகவும் தெற்குப் பகுதியில் ரேடார் சாதனங்கள் நிறுவப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது.

ஸ்பிராட்லி தீவுகளில் சீன ராணுவத்தின் கடற்படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!