சீனப் புத்தாண்டு விருந்தில் இந்திய நாட்டு ஊழியர்கள்

'எல்சிஸ் கிச்சன்', 'காண்டினெண் டல் டிலைட்' ஆகிய இரு உள்ளூர் உணவு நிறுவனங்களின் உரிமை நிறுவனமான ஹெசெட் & எமட் நிறுவனம், 'ஹெசெட் டேபல்' எனும் சமூக திட்டத்தைத் தொடங் கியுள்ளது. அத்திட்டத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அந்த விருந்து நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 170 பேர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சமூகத்துக்கும் தரமிக்க உணவை வழங்கவும் உணவு விரயத்தைக் குறைக்கவும் இந்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. உணவு உபரியை சரியான முறையில் கையாள மீதமுள்ள உணவு பொருட்களைச் சமைத்து ஊழியர்களுக்கு சத்துள்ள உணவாய் விநியோகம் செய்யவும் பொறுப்பேற்றுள்ளது ஹெசெட் & எமட் நிர்வாகம். இதன் தொடர்பில் தான் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடன் இந்நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாக ஹெசெட் & எமட் நிர்வாக இயக் குநர் ரூபன் ஆங், 29, கூறினார்.

"சிங்கப்பூரர்களுக்கு ஆரோக் கியமான உணவை 1950களி லிருந்து வழங்கும் நீண்ட வரலாறு கொண்டுள்ள மூன்றாம் தலை முறை குடும்ப நிறுவனமான எங்களுக்கு சமூக திட்டத்தைத் தொடங்குவது இயல்பாகத் தோன் றியது. எங்களுக்கு நெருங்கியுள்ளவர்களான ஊழியர்களுட னும் அவர்களின் நண்பர்களுட னும் இத்திட்டத்தின் துவக்கத்தை ஒருங்கிணைந்த விருந்துடன் கொண்டாட விரும்பினோம்," என்றார் இயக்குநர் ரூபன் ஆங்.

சீனப் புத்தாண்டு விருந்தில் முதன் முதலாக 'லோ ஹெய்' செய்து மகிழும் இந்திய நாட்டு ஊழியர்கள். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!