இயக்குநராகத் துடிக்கும் நித்யா மேனன்

மும்மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிப் படங்களிலும் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் ரசிகர்களிடம், 'ஓ காதல் கண்மணி', 'காஞ் சனா 2' உள்ளிட்ட படங்கள் அவரை பிரபலப்படுத்தின. வித்தியாசமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடிக்கிறார் என்றும் பெயரெடுத்தார். 'நூற்றியெண்பது', 'வெப்பம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை', 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார் நித்யா. தற்போது சூர்யாவுடன் '24' என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் மிக விரைவில் இயக்குநராகப் போவதாக அறிவித்துள்ளார் அம்மணி. இது அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாம். "எனக்கு கதைகள் எழுதுவதில் ரொம்பவே ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் நிறைய கதைகளை எழுதி வருகிறேன். இந்தக் கதைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து ஒரு படத்தை இயக்க உள்ளேன். "அதன் பின்னர் அடுத்தடுத்த கதைகளையும் இயக்க வேண்டும் என்பதே என் திட்டம். என்னைப் பொறுத்தவரை நான் எழுதியவை அனைத்துமே நல்ல கதைகள்தான். அதேசமயம் அவை திரைப்படமாக உருவாக் கப்படும் அளவுக்கு வசதியானதாக, ஜன ரஞ்சகமாக உள்ளதா என்பதை அனுபவசாலி களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்வேன். இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு மார்க்கெட் இருக்கும்வரை நடிப்பேன். படங்கள் குறைந்ததும் இயக்குநர் ஆகிவிடுவேன். இதுவே எனது திட்டம் என்று கூறியுள்ளார் நித்யா மேனன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!