மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ராகுல், கெஜ்ரிவால் பங்கேற்பு

புதுடெல்லி: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவரின் மரணத்திற்கு நீதி கோரி தலைநகர் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தனர். ஆனால் நாடு முழுவதும் பல்வேறு மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண் டனர். ஜவகர்லால் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார், தேச விரோத வழக்கில் சிறையில் அடைக்கப் பட்ட நிலையில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதர ஆம் ஆத்மி கட்சியினரும் இதில் பங்கேற்ற னர். ஹைதராபாத் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து தலித் மாணவர் விபரீத முடிவை தேடிக் கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பு ஏற்று மத்திய அமைச் சர்கள் பண்டாரு தத்தாத் ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலகக் கோரி போராட் டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ரோகித் வெமு லாவின் மரணத்திற்கு நீதி கோரி தலைநகர் டெல்லியில் நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய ராகுல் காந்தி, "பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்ப்புக் குரல்களை நெரிக்கிறது. இளம் மாணவர் களின் கருத்துகளைக் கேட்க அரசு தயாராக இல்லை," என்றார். "மக்கள் தங்களது கருத்து களைச் சுதந்திரமாக தெரி விக்கும் நாடு நமக்குத் தேவை. ஆர்எஸ்எஸ், பாஜக, தங்களது கருத்தினை மட்டும் திணிக்க விரும்புகிறது. "தலித், பழங்குடியின மக்களை அரசு ஒடுக்குகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங் களில் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை நெரிக்காத அளவிற்கு நமக்குச் சட்டங்கள் தேவை," என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!