ஆர்சனலைப் புரட்டி எடுத்த மெஸ்சி

லண்டன்: ஆட்டம் முடிய ஏறத்தாழ 20 நிமிடங்கள் இருந்தபோது பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி போட்ட இரண்டு கோல் களால் சொந்த மண்ணில் விளை யாடிய ஆர்சனல் அதன் ரசிகர் களின் கண்ணெதிரே தோல்வி யைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் வெற்றி அடைந்த பார்சிலோனா, காலிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. தனது சொந்த அரங்கில் நடை பெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 2=0 எனும் கோல் கணக்கில் வீழ்ந்த ஆர்சனல் பார்சிலோனாவின் அரங்கில் நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்று ஆட்டத்தை வென்று காலிறுதிக்குத் தகுதி பெறுவது சந்தேகம்தான் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஆறாவது முறையாக ஐரோப்பிய கிண்ணத்தை ஏந்த முனைப்புடன் விளையாடி வரும் பார்சிலோனா, கடந்த 33 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் உள்ளது. கடந்த 15 ஆட்டங்களில் அது 14 வெற்றி களைப் பதிவு செய்துள்ளது. முதல் பாதி ஆட்டத்தில் தாக்கு தலில் ஈடுபட்ட ஆர்சனலின் கோல் முயற்சிகளை பார்சிலோனாவின் தற்காப்பு அரண் வெற்றிகரமாக முறியடித்தது.

பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்சனலுக்கு எதிராகத் தமது குழுவின் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்த மெஸ்சி (மேல்படம்- நடுவில்) தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!