‘வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்திருக்கும் நிலையை மறுஆய்வு செய்வேன்’

புக்கிட் பஞ்சாங் தனித் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு லியாங் எங் ஹுவா, மனிதவள பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்போவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டால், வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூரின் நிலையை மறுபரிசீலனை செய்ய உதவப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

நிதி, வர்த்தக தொடர்பு அமைச்சுகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (ஜிபிசி) தலைவரும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திரு லியாங், நான்காவது முறையாகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனிதவளத்திற்கான நாடாளுமன்றக் குழுவில் இணைய முயற்சி எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நிறுவனமயமாக்குதல், சிங்கப்பூரர்களுக்கான சுகாதார காப்புறுதித் திட்டங்களை மேம்படுத்துதல், மின்சார வாகனங்களின் பரவலான பயன்பாட்டை அதிகரிக்கக் குரல் கொடுத்தல் ஆகியவை அவரது பிற முன்னுரிமைகள் என்று தெரிவித்தார்.
புக்கிட் பஞ்சாங்கின் வாக்காளர்களுக்கான தமது தேர்தல் அறிக்கையில் திரு லியாங் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

டிபிஎஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரான 56 வயது லியோங்கை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) வேட்பாளரான பேராசிரியர் பால் தம்பையா எதிர்த்து போட்டியிடுகிறார்.

அதனால் இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!