டான் செங் போக்: வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் வெற்றி பெற தமது அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் நேற்று தெரிவித்தார். நேற்று பிரசாரத்துக்கான இறுதி நாள்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணிக்கு அவர் தலைமை தாங்குகிறார்.

“வெற்றி பெற எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. வெற்றி பெற நாங்கள் பாடுபவோம். அப்படித்தான் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். குடியிருப்பாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வெற்றி பெற எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்,” என்றார் டாக்டர் டான்.

நேற்றிரவு நடைபெற்ற தொகுதி அரசியல் ஒளிபரப்பில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணி உரையாற்றியது. தொகுதி அரசியல் ஒளிபரப்பில் பேசிய டாக்டர் டான் செங் போக், தமது கட்சியின் நிலைப்பாட்டை வாக்காளர்களுக்குத் தெரிவித்தது மட்டுமல்லாது, தமது அணியினரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

வேலை, வாழ்க்கை ஆகியவற்றில் சிங்கப்பூரர்கள் புதிய அணுகு முறைகளைக் கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். புத்தாக்கத்திறனுடன் செயல்பட வேண்டும் என்றும் புதிய தீர்வுகள் அவசியம் என்றும் அவர் கூறினார். தலைமை கூறுவதற்கு மறுபேச்சு இல்லாமல் அப்படியே செயல்படும் முறையை மக்கள் செயல் கட்சி எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். இத்தகைய முறை இருக்கக்

கூடாது என்றார் டாக்டர் டான்.

மாறாக, தமது கட்சியுடன் இணைந்து வெஸ்ட் கோஸ்ட் உணர்வை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி வரும் பட்சத்தில் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று

டாக்டர் டான் தெரிவித்தார்.

“1980ஆம் ஆண்டில் நான் ஆயர் ராஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதிவாசிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். குடியிருப்பாளர்களுடன் இணைந்து உணர்வுபூர்வமான சமூகத்தை நாங்கள் அமைத்தோம். முதியோருக்கும் உடற்குறையுள்ளோருக்கும் ஏற்

புடைய முதல் சமூக நிலையத்தை அமைத்தோம்.

“இளையர்களும் மூத்தோரும் கலந்துறவாட சிறப்பு பகல்நேர பராமரிப்பு நிலையத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அப்போதைய சமூக உணர்வு வலுவாக இருந்தது. இன்றைய சவால்மிக்க காலத்தைக் கடந்து செல்ல அதே சமூக உணர்வை நாங்கள்

மீண்டும் உயிர்ப்பிப்போம்.

“இப்போது நான் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு மீண்டும் வந்துள்ளேன். ஜூரோங் ஈஸ்ட் நகர மன்றம், தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றின் தலைவராகப் பொறுப்பு வகித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. புத்தம் புதிய திட்டங்களை வைத்திருக்கும் மிகச் சிறந்த அணியுடன் நான் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு வந்துள்ளேன்.

“திருவாட்டி ஹேசல் புவா, விருது வென்ற மாணவர் கல்வித் துறை நிலையத்தை நிறுவியவர். அவர் கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிஎஸ்சி கல்விமானாவார். கணிதத் துறையில் முதல் நிலை தேர்ச்சியுடன் இவர் பட்டம் பெற்றுள்ளார். நிதி அமைச்சின் நிர்வாகச் சேவையில் அவர் பணியாற்றியவர். பொதுச் சேவையிலும் தனியார் சேவையிலும் அவர் வெற்றி கண்டவர்.

“திரு நடராஜா லோகநாதன் பெரியவர்களுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றின் நிறுவனர். பயிற்சி, வர்த்தக நிர்வாகத்தில் அவர் மூன்று முதுகலைப் பட்டங்களை வைத்திருக்கிறார். லெஃப்டனண்ட் கர்னல் பதவி வகித்து சிங்கப்பூர் ஆயுதப் படையின் மனிதவளப் பிரிவில் பணியாற்றினார். உலகளாவிய காப்புறுதி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியாக திரு ஜெஃப்ரி கூ பணியாற்றுகிறார். விவசாயத் துறைக்கான காப்புறுதி தொடர்பாக அவர் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர். திரு லியோங் மன் வாய் துணிகர மூலதன நிறுவனம் ஒன்றின் நிறுவனர். பிஎஸ்சி கல்விமானான திரு மன் வாய் ஜிஐசியில் ஓசிபிசி செக்யூரிட்டிஸ், இன்வெஸ்ட்மண்ட் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

“எனது அணிக்கு உங்கள் நகர மன்றத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்கும் திறனும் அனுபவமும் உள்ளது. உங்களுக்குச் சேவையாற்ற தேவையான சேவை மனப்பான்மை எங்களிடம் உள்ளது. உங்களுக்குச் சிறப்பான முறையில் சேவையாற்ற எங்களால் முடியும்,” என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி வாக்காளர்களுக்கு டாக்டர் டான் உறுதி அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!