முன்னோடி வாக்கு எண்ணிக்கையில் 10 இடங்களில் பாட்டாளிக் கட்சி முன்னிலை

அனைத்து தொகுதிகளிலும் முன்னோடி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இரண்டு குழுத் தொகுதிகளிலும் ஒரு தனித்தொகுதியிலும் பாட்டாளிக் கட்சி முன்னிலை வகிக்கிறது.

நான்கு வேட்பாளர்கள் கொண்ட செங்காங் குழுத்தொகுதி, ஐந்து உறுப்பினர் கொண்ட அல்ஜுனிட் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி என மொத்தமாக 10 இடங்களில் பாட்டாளிக் கட்சி முன்னிலை வகிக்கிறது.

முன்னோடி வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் முடிவுகள் குறித்த முன்னோடி நிலையை உணர்த்துவதற்காக மட்டுமே. எண்ணப்பட்ட முதல் 100 வாக்குகளின் அடிப்படையில் இந்த முன்னோடி வாக்கு எண்ணிக்கை விகிதம் கணிக்கிடப்படுகிறது. இறுதி முடிவு மாறக்கூடும்.

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 60% முன்னிலை. மக்கள் செயல் கட்சி 40%. 

செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 53% முன்னிலை. மக்கள் செயல் கட்சி 47%. 

ஹவ்காங் தனித்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 58% முன்னிலை வகிக்கிறது. மக்கள் செயல் கட்சி 42%.

இது தவிர மேலும் சில தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. மிகவும் குறுகிய வித்தியாசத்தில் மக்கள் செயல் கட்சி முன்னிலை வகிக்கிறது.

அவற்றில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியும் ஒன்று. வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு ஈஸ்வரன் தலைமையிலான மக்கள் செயல் கட்சி 52% முன்னிலை வகிக்கிறது. டாக்டர் டான் செங் போக் தலைமையிலான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 48%. 

இதே போல முன்னோடி வாக்கு எண்ணிக்கையில்  ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமையிலான மக்கள் செயல் கட்சி 54% முன்னிலை வகிக்கிறது. பாட்டாளி கட்சி 46%.

இதே நிலைமை தொடர்ந்து இறுதியில் செங்காங், அல்ஜுனிட் குழுத்தொகுதிகளும் ஹவ்காங் தனித் தொகுதியும் எதிர்க்கட்சியின் வசம் வந்தால் இரண்டு குழுத்தொகுதிகளை எதிர்கட்சி கைப்பற்றியது முதன் முறையாக இருக்கும். இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இறுதியில் மொத்த வாக்கு எண்ணிக்கை மாறக்கூடும். இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும்.

அல்ஜுனிட் - பாக முன்னிலை

பாட்டாளிக் கட்சி - 60%

பிரித்தம் சிங்

சில்வியா லிம்

ஃபைசால் மனாப்

ஜெரல்ட் கியாம்

லியோன் பெரேரா

 

மக்கள் செயல் கட்சி - 40%

விக்டர் லாய்

சுவா இங் லியோங்

ஷாம்சுல் கமார்

அலெக்ஸ் இயோ

சான் ஹுய் யு

 

செங்காங் - பாக முன்னிலை

பாட்டாளிக் கட்சி - 53%

ஜேமஸ் லிம்

லுயிஸ் சுவா

ரயீசா கான்

ஹி டிங்ரு

 

மக்கள் செயல் கட்சி - 47% 

இங் சீ மெங்

லாம் பின் மின்

அம்ரின் அமின்

ரேமண்ட் லாய்

ஹவ்காங் - பாக முன்னிலை

டெனிஸ் டான் (பாக) - 58%

லீ ஹோங் சுவாங் (மசெக) - 42%

 

ஈஸ்ட் கோஸ்ட்  - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 54%

ஹெங் சுவீ கியட்

மாலிக்கி ஒஸ்மான்

ஜெசிக்கா டான்

ஷெரில் சான்

டான் கியட் ஹாவ்

 

பாட்டாளிக் கட்சி - 46%

அப்துல் ஷரிஃப் அபு காசிம்

டைலன் இங்

கென்னத் ஃபூ

டெரன்ஸ் டான்

நிக்கோல் சியா

 

வெஸ்ட் கோஸ்ட் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 52%

எஸ். ஈஸ்வரன்

டெஸ்மண்ட் லீ

ஃபூ மீ ஹார்

அங் வெய் நெங்

ரேச்சல் ஓங்

 

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 48%

டான் செங் போக்

லியாங் மன் வாய்

ஹேசல் புவா

நடராஜா லோகநாதன்

ஜெஃப்ரி கூ

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!