மோசடி குறித்த உங்கள் புரிந்துணர்வை அறிய விரும்புகிறோம்.

வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு மோசடியைத் தடுப்போம்

இந்த புதிய நடவடிக்கை அவற்றுக்கு எதிராக செயல்பட வைக்கிறது. உள்ளூர் தொலைபேசி சேவைகளின் சந்தாதாரர்கள், இப்போது. வெளிநாட்டு அழைப்புகளை இலவசமாக தடைசெய்துகொள்ளலாம். 

கடந்த ஆண்டு முழுவதும், திருவாட்டி டயினா லிம் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து முன்பின் தெரியாத எண்களின் மூலம் வரக்கூடிய எந்த அழைப்புகளையும் அவர் எடுப்பதில்லை.

“முக்கியமானதாக இருந்தால், அழைப்பவருக்கு என்னை குறுஞ்செய்தி வழியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும்” என்று 29 வயது நிதி ஆலோசகரான அவர் கூறினார்.

ஏன் அழைப்பவர் யாரென்று அறிந்துகொள்ள அவர் மறுக்கிறார்?

ஏனெனில், அவரது அனுபவப்படி, அத்தகைய முன்னறிவிப்பின்றி கேட்காமலேயே வரும் அழைப்புகள், செயற்கையான தானியக்கக் குரலில் உள்ளூர்வாசி அல்லாத பானியில் பதிவுசெய்யப்பட்டு, ஒரு வங்கி அல்லது அரசாங்க அமைப்பிடம் இருந்து வருவதுபோல அமைந்திருக்கும். அதோடு எரிச்சலூட்டும் அந்த அழைப்புகள், வாரம் இரண்டு முறை வரும்.

“செய்திகளில் பலவித மோசடிகள் பற்றி அண்மையில் படித்து வருவதால், இந்த அழைப்புகள் மோசடிக்கான முயற்சிகளே என்று என்னால் உணரமுடிகின்றது” என்றார் அவர்.

திருவாட்டி லிம்மின் கவனமான இந்த பழக்கம், தற்போது சிங்கப்பூரில் பலருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தையும் அதிகரித்துவரும் கவலையையும் வெளிக்காட்டுகிறது. மோசடிக்காரர்கள் ஏமாற்றப்பட்ட பலரை அடைவதற்கு தொலைபேசி அழைப்புகளே முக்கிய காரணமாக உள்ளன.

கடந்த ஆண்டின் முதற்பாதியில் 24, 525 மோசடிப் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது 2022ம் ஆண்டை ஒப்பிடுகையில் 64.5 விழுக்காடு அதிகம் என்று காவல் துறை அறிவித்துள்ளது. இந்த சம்வங்களில் 17.5 விழுக்காடு மோசடிகள், தொலைபேசி அழைப்புகள் வழியேதான் நடந்துள்ளன.

திருவாட்டி லிம் கொடுத்த உத்தேச புள்ளி விவரங்களின்படி, 30 விழுக்காட்டு அழைப்புகள், அவருக்கு வெளிநாட்டு தொலைபேசி எண்களிலிருந்துதான் வந்துள்ளன. தொலைபேசி எண்களுக்கு முன், “+81” (ஜப்பான் நாட்டு எண் குறியீடு) மற்றும் “+44” (பிரிட்டன் நாட்டு எண் குறியீடு) ஆகியவற்றை உள்ளடக்கி அழைப்புகள் வந்துள்ளன.

கடந்த 2020 ஏப்ரல் மாதம் தொடங்கி, வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய அனைத்து அழைப்பு எண்களுக்கு முன்னால், + குறி இணைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு மோசடி அழைப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவியாக இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) உள்நாட்டு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் எண்களைப்போலத் தோன்றும் +65 என்ற குறியீட்டு எண்களுடன் வரக்கூடிய அனைத்து வெளிநாட்டு அழைப்புகளுக்கும் தடை விதித்துள்ளது.

அதனால்தான் மோசடிக்காரர்கள் தங்களது செயல்முறையை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைத்துலக தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகிய செயலிகளை பயன்படுத்தி பாதிக்கப்படுவோரை தொடர்புகொள்கின்றனர் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் வலைத்தள திட்ட அலுவலகத்தின் இயக்குநர் திரு டான் ஃபொங் சின் தெரிவித்தார்.

மோசடிக்கு எதிரான புதிய நடவடிக்கை

மோசடி தொலைபேசி அழைப்புகளின் அலையை ஒடுக்க சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் புதிய நடவடிக்கைகளை (கடந்த வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளன. அனைத்துலக நாடுகளில் இருந்து வரக்கூடிய தொலைபேசி அழைப்புகளை முற்றிலும் தடுக்கும் ஒரு செயல்முறையைத் தேர்வுசெய்துகொள்வதே அதுவாகும்.

அந்த இலவசச் சேவையை அனைத்து சந்தாதாரர்களுக்கும் உள்ளூர் தொலைபேசி வலைத்தள நிறுவனங்களான சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப், சிம்பா ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

அது ஒரு ஆறுதல் அளிக்கும் செயல்பாடாக ஸ்டார்ஹப் சந்தாதாரரான திருவாட்டி லிம் கருதுகிறார். “தேவையற்ற மோசடி அழைப்புகளை (இந்த புதிய நடவடிக்கை) குறைக்கவும் தடுக்கவும் உதவும்” என்று அவர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் வலைத்தள அளவில், மோசடி அழைப்புகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றின் மீது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவை பின்வருகின்றன:

குறிப்பிட்ட அரசாங்க அமைப்புகள் மற்றும் முகவைகள் என்று போலியாக அறிவித்துக்கொள்பவை அல்லது தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் (ஆபத்தானவை என்று) கருப்புப் பட்டியலிடப்பட்ட அழைப்புகள்.

ஆக அதிகமான அளவில் வழக்கத்துக்கு மாறாகப் பெறப்படும் கணினிகளால் இயக்கப்படும் அழைப்புகள். அவை ரோபோ எனப்படும் இயந்திர அழைப்புகள் என்றும் அறியப்படுகின்றன.

சிங்கப்பூர் எண்களிலிருந்து வருவதைப்போல காட்டிக்கொள்ளும் “+65” என்ற குறி எண்களுடன் தொடங்கும் அழைப்புகள்.

சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, அங்கிருந்து தங்களது இல்லங்களுக்கு கைப்பேசியின் உள்ளூர் எண்களில் தொலைபேசி அழைப்புகள் செய்யும்போது அந்த அழைப்புகள் தடையின்றி இங்கு கிடைக்கும். “+65” என்ற குறி எண்களை தொலைபேசி அழைப்பை இங்கு பெறுவோர்கள் காணமுடியும்.

மேற்குறித்த நடவடிக்கைகளின் பயனால், கடந்த ஆண்டு, ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, சிங்கப்பூர் குடியிருப்பாளர்களை மோசடி அழைப்புகளில் இருந்து பாதுகாக்க 300 மில்லியன் அழைப்புகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தடுத்து முடக்கப்பட்டுள்ளன என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வருகின்ற ஒவ்வொரு நான்கு அழைப்புகளிலும் ஒரு அழைப்பு முடக்கப்படுகிறது.

இந்த புதிய தற்காப்பு நடவடிக்கை மோசடிகளால் ஏற்படக்கூடிய எஞ்சிய ஆபத்துகளை நிர்வகிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய செயல்பாடுகள் (சிங்கப்பூர் அழைப்புகளைக்போல தோற்றமளிக்கும் வெளிநாட்டு அழைப்புகளை) முடக்குவதற்கு பயன்பட்டாலும் மோசடிக்காரர்கள் பாதிக்கப்படுவோரை தொடர்புகொள்ள வெளிநாட்டு எண்களில் இருந்தோ அல்லது அவைபோல தோன்றும் எண்களிலோ அழைக்க முயற்சி செய்வார்கள் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் திரு டான் விளக்கினார்.

எனவேதான், முற்றிலுமாக வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை முடக்கிவிடும் அண்மைய நடவடிக்கை, பாதுகாப்பின் மேலும் ஒரு படியாக தொலைபேசியை பயன்படுத்துவோருக்கு வேண்டுமா வேண்டாமா என்ற ஒரு தேர்வை வழங்குகிறது.

இந்த 2024 ஆண்டின் மத்தியில், அனைத்துலக எண்களின் வழியாக வரக்கூடிய குறுஞ்செய்திகளையும் முடக்கிட உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஐஎம்டிஏ பணியாற்றிவருகிறது.

அரசாங்கம், வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை தடுத்து முடக்கும் தேர்வு போன்ற பலவித எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பகுத்தறிவுடன் செயல்படுவது மிகவும் முக்கியம். அதுவே மோசடிகளில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சிறந்த வழியாகும் என்று காவல்துறையின் பொதுமக்கள் மோசடிக் கல்வி அலுவலகத்தின் கண்காணிப்பாளர் திரு மெத்தியு சூ கூறினார்.

எப்படி செயல்படுகின்றது? ஒரு பார்வை

யார் இந்த சேவையை பயன்படுத்தலாம்?

உள்ளூர் தொலைத்தொடர்பு சேவைகளை ( சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப், சிம்பா ) பயன்படுத்தும் அனைத்து சந்தாதாரர்களும் இச்சேவையை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் மெய்நிகர் வலைத்தள சேவைகளை (சர்கல்ஸ், லைஃப், கோமோ, மைரிபப்ளிக்) பயன்படுத்தும் சந்தாதாரர்களும் இச்சேவையை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

சந்தாதாரர்கள் எவ்வாறு அச்சேவையை செயல்படுத்தலாம்?

பல வழிகளில் சந்தாதாரர்கள் இச்சேவையை தொடங்கிக்கொள்ளலாம். இணையம், நேரடி தொலைபேசி தொடர்பு எண்கள், குறுஞ்செய்தி, அல்லது தேர்ந்தெடுத்துள்ள சேவை நிறுவனங்களின் கைப்பேசி செயலிகள் ஆகியவற்றின் வழியாக தொடர்புகொள்ளவும்.

இந்த சேவையை செயல்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்?

இது ஒரே நாளில் செயல்படுத்தக்கூடியதாகும்.

சந்தாதாரர்கள் இச்சேவையை எந்த நேரத்திலும் நிறுத்திக்கொள்ளலாமா?

வெளிநாட்டு அழைப்புகளை தடுத்து முடக்கும் சேவையை அவரவர் தேவைகளுக்கு ஏற்ப சந்தாதாரர்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். அதாவது, வெளிநாட்டு அழைப்புகளை எதிர்பார்க்கும் வேளைகளில், சேவையை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கு ஒரு நாள் தேவைப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!