அண்மையில் 18% நோயாளிகளுக்கு ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபால் பாதிப்பு: அமைச்சு

சிங்கப்பூரில் அண்மை வாரங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்ட 18 விழுக்காட்டினருக்கு புதிய ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபால் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கையும் நிலையாக இருப்பதாக செவ்வாய்க்கிழமை அது குறிப்பிட்டது.

இங்கு முதல் ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபு பாதிப்பு மே 5ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது.

புதிய கிருமித் திரிபால் கிருமிப் பரவல் அதிகரித்ததாகவோ நோயின் தீவிரம் அல்லது மரணமடைந்தோர் எண்ணிக்கை கூடியதாகவோ உலகச் சுகாதார நிறுவனம் தகவல் வெளியிடவில்லை என்பதை அமைச்சு சுட்டியது.

ஏறக்குறைய 51 நாடுகளில் ‘இஜி.5 ஓமிக்ரான்’ வகை கிருமித் திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் கிருமிப்பரவல் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!