புதிய பொங்கோல் நூலகத்தில் சிறுவர்களுக்கு சிறப்பு வசதிகள்

நூல் வாசிக்­கும் பழக்­கத்தை மிகச் சுவா­ரஸ்­ய­மான முறை­யில் சிறு­வர்­க­ளி­டம் ஊக்­கு­விக்­கும் அம்­சங்­கள், உடற்­குறை உள்­ளோ­ருக்­கான வச­தி­க­ளு­டன் அடங்­கிய பொங்­கோல் வட்­டார நூல­கம் நேற்று திறக்­கப்­பட்­டது.

‘ஒன் பொங்­கோல்’ நிலை­யத்­தில் உள்ள இந்த நூல­கத்­தின் முதல் இரண்டு மாடி­கள் சிறு­வர்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது இந்த இரு மாடி­கள் மட்­டுமே பொது­மக்­க­ளுக்­குத் திறக்­கப்­பட்­டுள்­ளன. மற்ற மூன்று மாடி­கள் சில மாதங்­களில் திறக்­கப்­படும்.

சிறு­வர்­க­ளுக்­கான பல கேளிக்­கைப் பகு­தி­களும் ‘ஸ்டோ­ரீஸ் கம் அலைவ்’ என்ற கதை­கள் உரு­வா­கும் அறை­யும் நூல­கத்­தில் உள்­ளது. அந்த அறை­யில் தொடு­தி­ரை­களும் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த இரு மாடி­களில் எல்லா வய­துச் சிறு­வர்­களும் பயன்க்­பெ­றக்­கூ­டிய கதை­சொல்லி பகுதி, உல­க­மும் நாமும் எனும் தொகுப்பு, சிறு­வர்­கள் நட­வ­டிக்­கைப் பகுதி போன்­றவை உள்­ளன.

அமெ­ரிக்­கா­வின் ஸ்மித்­சோ­னி­யன் அரும்பொருளகத்துடன் கூட்டு முயற்­சி­யாக ‘ஸ்பார்க்! லேப்’ என்ற பகுதி நூல­கத்­தின் இரண்­டாம் மாடி­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

SPH Brightcove Video

இவ்­வி­டத்­தில் ஏழு வய­துக்கு மேற்­பட்ட சிறு­வர்­கள் தாங்­களே நேர­டி­யாக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு, படைப்­பு­களை உரு­வாக்கி சவால்­களை மேற்­கொள்­ள­லாம். இதில், உல­க­நா­டு­களை மைய­மா­கக்­கொண்ட, வெளி­நாட்­டுத் தூத­ர­கங்­கள் வழங்­கிய நூல்­கள் அடுக்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

“சிறு­வர்­க­ளின் கற்­ப­னைத் திறனை வளர்க்க, மற்ற நூல­கங்­களில் இல்­லாத இந்த வசதி உத­வு­கிறது. இந்த நூல­க­மும் வச­தி­களும் வட­கி­ழக்­குக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு பெரும் பய­னைத் தரும்,” என்­றார் சிங்கா அக­டமி துணைப்­பாட நிலை­யத்­தில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் ஹேம­லதா ரமேஷ், 46.

கடந்த சில ஆண்­டு­க­ளாக நூல­கங்­களில் தொண்­டூ­ழி­ய­ராக இருக்­கும் இவர், தமது இரு பிள்­ளை­க­ளு­டன் பொங்­கோல் நூல­கத்­தில் தொண்­டு­ழி­யம் புரிய விருப்­பம் தெரி­வித்­தார்.

“இந்த நூல­கத்­திற்கு வரும் உடற்­கு­றை­யுள்­ள­வர்­க­ளுக்கு உதவ, தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு சிறப்­புப் பயிற்­சி­கள் அளிக்­கப்­பட்­டன. கண் பார்வை இல்­லா­த­வர் களுக்கு எப்­படி கதை சொல்­வது, நட­வ­டிக்­கை­கள் உரு­வாக்­கு­வது போன்­ற­வற்­றைக் கற்­றுக்­கொண்­டேன்,” என்­றார் ஹேம­ல­தா­வின் மக­ளான 16 வயது ரசிகா ரமேஷ்.

உடற்­குறை உள்­ளோ­ரும் நூல்­களை எளிதில் இர­வல் பெறு­வ­தற்­கான வச­தி­களும் தொழில்­நுட்­ப­மும் பொங்­கோல் நூல­கத்­தில் உள்­ளன.

சக்­கர நாற்­காலி பயன்­ப­டுத்­து­வோ­ரும் பார்வை குறை­பா­டு உள்­ளோ­ரும் எளி­தில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நூல் இர­வல் நிலை­யங்­கள் அந்த வச­தி­களில் ஒன்று.

நூல்­களை மேசை­களில் வைக்­கா­மல் அவற்றை இர­வல் வாங்க உத­வும் ஆர்­எ­ஃப்­ஐடி தொழில்­நுட்­ப­மும் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், புலன்­கள் அதி­கப்­ப­டி­யா­கத் தூண்­டப்­ப­டு­வ­தால் சம­நிலை கெடும் பிரச்­சினை உள்ள உடற்­கு­றை­யுள்­ளோர் அமை­தி­பெற, கால்ம் போட்ஸ் எனும் சிறப்பு இடங்­கள் நூல­கத்­தில் உண்டு.

நூல­கங்­க­ளை­யும் ஆவ­ணக்­காப்­ப­கங்­க­ளை­யும் அனை­வ­ரும் அணு­கும் இடங்­க­ளாக மாற்ற தேசிய நூலக வாரி­யம் முயன்று வரு­கிறது. அதற்­கேற்ப வாரி­யத்­தின் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஆலோ­ச­னைக் குழு­வு­டன் சேர்ந்து பொங்­கோல் நூல­கத்­தில் இந்த வச­தி­கள் பொருத்­தப்­பட்­டன. “உடற்­குறை உள்­ளோர் எளி­தில் அணு­கும் நூல்­தொ­குப்பு, அவர்­க­ளுக்கு அமை­தி­யான இடம், பார்­வைக் குறை­பாடு உள்­ளோ­ருக்கு வண்ண விசைப் பல­கை­கள் போன்ற மற்ற நூல­கங்­களில் இல்­லாத சிறப்பு அம்­சங்­கள் இந்த நூல­கத்­தில் உள்­ளன,” என்று தேசிய நூலக வாரி­யத்­தின் நூல் சேக­ரிப்­புத் திட்­ட­மி­டல், மேம்­பாட்டு குழுவை சேர்ந்த அதி­காரி ரேணு சிவா குறிப்­பிட்­டார்.

உடற்­கு­றை­யுள்ள நூலக உறுப்­பி­னர்­கள், நூல்­களை ஆறு வாரங்­க­ளுக்கு இர­வல் பெறு­தல் போன்ற கூடு­தல் சலு­கை­கள் பெறு­வார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!