முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு ஜூலையில் $1,100 வரை மெடிசேவ் தொகை

முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கு ஜூலையில் 200 வெள்ளி முதல் 1,100 வெள்ளி வரை மெடிசேவ் தொகை நிரப்பப்படுகிறது. 

இதனால் அரசாங்கத்துக்கு $254 மில்லியன் செலவு ஏற்படும். ஆனால் இது, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட செலவைவிட குறைவு என்று நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

மெடிஷீல்ட் லைஃப், கேர்ஷீல்ட் லைஃப் மற்றும் இதர மெடிசேவ் அங்கீகரித்த காப்புறுதித் திட்டங்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான செலவுகள், பகல் நேர அறுவை சிகிச்சை, அங்கீகரிக்கப்பட்ட வெளிநோயாளி சிகிச்சை ஆகியவற்றுக்கு மெடிசேவில் நிரப்பப்படும் பணத்தைப் பயன்படுத்த முடியும்.

1945க்கும் 1949க்கும் இடையே பிறந்த சிங்கப்பூரர்களுக்கு $250 வழங்கப்படும். 1940ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களுக்கு $500 கிடைக்கும். 

1935ஆம் ஆண்டுக்கும் 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களுக்கு $700 வழங்கப்படும். 1934ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு $900 வழங்கப்படும்.

மெடிஷீல்ட் லைஃப் சந்தாக் கட்டண அதிகரிப்பின் சுமையைக் குறைப்பதற்காக 2023இல் 84 வயதான அல்லது மேற்பட்ட வயதுடைய (84 முதல் 88 வரையில் உள்ளவர்கள்) ஏற்கெனவே கடுமையான நோய்க்கு ஆளான சிங்கப்பூரர்களுக்கு கூடுதலாக 50 வெள்ளியும் 88 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு கூடுதலாக 200 வெள்ளியும் 2025ஆம் ஆண்டு வரை வழங்கப்படும்.

நாட்டின் ஆரம்பக்காலத்தில் பங்களித்த சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவிப்பதற்காக 2014ஆம் ஆண்டில் முன்னோடித் தலைமுறைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!