மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை

ஏமாற்றும் தந்திரமா? வாய்ப்பா? என்பதை அறிந்திடுங்கள்

வேலை மோசடிகளே 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் ஆக அதிக மோசடியாக இருந்தது. சிங்கப்பூர் காவல் துறையின் தரவுபடி மொத்த மோசடிகளில் 25.7% வேலை தொடர்பானவை. ஜனவரி முதல் ஜூன் 2023 வரை 5,737 வேலை மோசடிகள் பதிவாகின. 2022ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 2,944.

ஐந்து மாதங்களாக வேலை இல்லாமல் தவித்த நாயெலா தீபாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கு முன்னர் தெரியாதவரிடமிருந்து வந்த வாட்ஸ்அப் குறுந்தகவல் நம்பிக்கை அளிக்குமாறு இருந்தது.

நியூடொனிஸ் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த சாமுவெல் என்பவர் வேலைவாய்ப்பு முகவர் மூலம் தீபாவின் தகவல் கிடைத்ததாகவும் வேலை குறித்து அறிமுகம் தரவுள்ளதாகவும் அது என்ன பணி என்பதைச் சொல்லாமலேயே குறிப்பிட்டுள்ளார்.

தீபாவிற்கு உடனே மகிழ்ச்சி ஏற்பட்டது. “தொழில்நுட்பத் துறையில் ஏற்கனெவே எனக்கு ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அதே துறையில் வேலை கிடைத்தால் நல்லதுதானே,” என்பதுதான் அவரது எண்ணம்.

கடந்த 2023ஆம் ஆண்டு வேலை இழந்த இந்த 30 வயது பெண்மணி, மாதத்திற்கு 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வேலைக்காக அணுகிவந்துள்ளார். இதுவரை மூன்றே நிறுவனங்கள் மட்டுமே அவரைத் தொடர்பு கொண்டதால் மன உளைச்சலில் இருந்தார்.

அப்படி இருந்தும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த நிறுவனம் குறித்த தமது ஆராய்ச்சியையே முதலில் செய்தார்.

“வேலை குறித்த மோசடிகள் குறித்து கடந்த ஆண்டு நிறைய செய்தியை நான் படித்தேன். அதனால் கவனமாக இருக்க முற்பட்டேன்,” என்றார் அவர்.

இணையத்தில் அவர் தேடிய தகவல்கள் சந்தேகத்தையே விளைவித்தன. லிங்க்ட்இன் தளத்தில் குறிப்பிடப்பட்ட நிறுவனத்தின் இணையத்தள முகவரி செயல்பாட்டிலேயே இல்லை.

குறுஞ்செய்தி அனுப்பியவரிடம் உண்மை என்னவென கேட்கத் துணிந்தார். “இது மோசடியா?,” என்று கேட்டார். ‘சாமுவெல்’ தற்காத்து பேசத் தொடங்கினான். நிறுவனப் பதிவுப் பத்திரம் போன்ற ஒன்றை அனுப்பி தமது நிலைப்பாட்டை உறுதிசெய்ய முனைந்தான்.

அப்பதிவுப் பத்திரத்தை உற்று நோக்குகையில் நிறுவனத்தின் பெயர் நியூடொனிஸ் டெக்னாலஜிஸ் என்பதற்குப் பதிலாக “எக்ஸ்ட்ரிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்றிருந்தது.

குறுஞ்செய்தி அனுப்பியவரை ‘புலோக்’ செய்து தடுத்தார்.

பாதுகாப்புடன் இருக்க பொறுமை காக்கவும்

திடீரென வரும் வேலை வாய்ப்புகள் குறித்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தீபாவின் அனுபவம் கோடிகாட்டுகிறது.

நல்ல வேலை என்றும் நீண்ட காலம் வேலை தேடி வருவதால் உடனே வாய்ப்பை தன்வசப்படுத்த வேண்டும் என்றே தோன்றலாம். (தீபா இறுதியில் ஆலோசனை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்)

வேலை மோசடியில் சிக்குபவர்கள் பெரும்பாலும் இளையர்கள்.

சிங்கப்பூரிலுள்ள இளையர்கள், அதாவது 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைபட்டவர்கள், 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேலை மோசடியில் சிக்கியவர்களில் 50.8%. இந்த வயது வரம்பிலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், தூண்டிலிடும் ஊடுருவல்களில் சிக்கியுள்ளனர்.

ஏன் இளையர்கள் வேலை மோசடியில் சிக்குகின்றனர்?

வேலையில் சேரும் முறை குறித்த போதுமான அனுபவம் இல்லாதது, உடனே வேலையில் சேரவேண்டும் என்ற துடிப்பு, அதிகமான மின்னிலக்க அணுகுமுறை போன்றவை மோசடியில் அவர்கள் சிக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றார் சிங்கப்பூர் காவல் துறையின் மோசடி பொது கல்வி அலுவலகத்தின் உதவி இயக்குநர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மேத்தியூ சூ.

வேலை மோசடிகளில் பலவகை உண்டு. அதிகமானவை இதோ:

  • “ஏஜண்ட்” வேலைகள்: தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிவர்த்தனை செய்து பின்னர் இணையப் பரிவர்த்தனை, அல்லது வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம் போன்ற சேவைகள் மூலம் பணம் அனுப்புவது. இவற்றில் சிக்குபவர்கள் பண சலவைக் குற்றத்தையும் சந்திக்கிறார்கள்.
  • “அஃபிலியேட் மார்க்கெட்டிங்” வேலைகள்: இணைய வர்த்தகத் தளங்களில் பொருள்களை விளம்பரப்படுத்தி விற்க, முதலில் பொருள்களை வாங்க பணம் கேட்பது.
  • “சமூக ஊடக” வேலைகள்: சமூக ஊடகத்தில் வளம் வரும் புகழ்பெற்றவர்கள் அல்லது தளங்களை விளம்பரப்படுத்துமாறு கூறி, அதற்கு ‘கூடுதல் தொகை’ வழங்கப்படும் என்பது.

எந்த வேலைக்கும் முதலில் நீங்கள் பணம் கொடுக்கவேண்டும் என்று இருந்தால் அது பெரும்பாலும் மோசடியாகத் தான் இருக்கும் என்றார் காவல்துறைக் கண்காணிப்பாளர் சூ.

வேலை மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துகொள்ளுங்கள்

பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்கேம்ஷீல்டு தற்காப்பு செயலியை சேர்த்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டு செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, பாதுகாப்பு அரணாக, 2 அம்ச அல்லது பல நிலைகளுக்கான உறுதிப்பாடுகளை வங்கிச் செயலிகளுக்கும், சமூக ஊடக சிங்பாஸ் கணக்குகளுக்கும் முறையாக அமைத்துக்கொள்ளுங்கள். பேலா (PayLah),பேநவ் (PayNow), உட்பட்ட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

அதிகாரத்துவ வழிகளில் மோசடிக்கான அறிகுறிகளை சோதித்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்–ஷீல்டு வாட்ஸ்–அப் போட் செய–லியை go.gov.sg/scamshield-bot மூலம் பயன்–ப–டுத்–துங்–கள். மோச–டித் தடுப்பு நேரடி உதவி எண் 1800-722-6688 அலு–வ–லக நேரத்–தில் அழை–யுங்–கள். அல்லது scamalert.sg இணையத்தளத்தை நாடுங்கள். அதிகாரபூர்வ தளங்கள் வழி வழங்கப்படும் வேலை குறித்த நம்பகத்தன்மையை உறுதி செய்யவும். குறைந்த முயற்சிக்கு அதிக பணம் தருவதும் முதலில் பணம் கேட்கும் வேலை வாய்ப்புகளும் பெரும்பாலும் மோசடிகளாகத்தான் இருக்கும். 

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லுங்கள்:

மோசடிகளில் சிக்கியிருந்தால் உடனே காவல் துறையிடம் புகார் அளித்துவிடுங்கள். சமூக ஊடகத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகப்படும் கணக்குகளையும் பின்னணிக் குறிப்புகளையும் தவிர்த்து முடக்கிவிடுங்கள். நடந்த விவரங்களை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஏற்படுத்தியிருக்கும் மோசடிக்கான வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து மோசடிக்கு எதிராக வழங்கப்படும் ஆலோசனைகளை அறிந்துகொள்ளுங்கள். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!