வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மறுஆய்வு

கனரக வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பிலான நட வடிக்கைகளைப் போக்குவரத்து போலிசும் நிலப் போக்குவரத்து ஆணையமும் மறுஆய்வு செய்து வருகின்றன. நீ சூன் குழுத் தொகுதி எம்.பி. லுயிஸ் இங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை மூத்த துணை அமைச் சர் டெஸ்மண்ட் லீ, "அதிகபட்சம் 12 டன்னுக்கு மேல் சரக்கு ஏற்றும் சரக்கு வாகனங்களும் 10 டன்னுக்கு மேல் சரக்கு ஏற்றும் பொதுச் சேவை வாகனங்களும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருக்க வேண்டும்," என்றார். இந்தக் கட்டுப்பாட்டுக் கருவி வாகனங்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 60 கிலோ மீட்டராகக் கட்டுப்படுத்தும்.

இந்த வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் முறையாக இயங்குகின் றனவா என்பதை உறுதி செய்ய வாகன உரிமையாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வாகனங் களைப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அத்துடன், வேகக் கட்டுப் பாட்டுக் கருவிகளைத் தங்களுக் குச் சாதகமாக மாற்றியமைத் திருந்தால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு $1,000 வரை அபராதமோ அல்லது அதிக பட்சமாக மூன்று மாதச் சிறையோ விதிக்கப்படலாம். 2வது அல்லது அதற்கு மேற்பட்ட முறை அந்தக் குற்றத்தை இழைத்திருந்தால் $2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை விதிக்கப்படலாம். விதிமீறும் வாகனமோட்டிகளுக்கு அபராதம், தகுதி இழப்புப் புள்ளிகள் போன்ற தண்டனைகள் விதிக்கப்படும். அத்துடன், திரு இங்கின் வேகப் பதிவுக் கருவி குறித்த ஆலோசனையை தமது அமைச்சு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் லீ சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!