‘அரசு ஊழியர்களுக்கு பாரபட்சம் கூடாது’

அரசாங்கச் சேவை தன்னியல்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்தைச் சார்ந்ததே என்று பிரதமர் லீ சியன் லூங் கூறி யிருக்கிறார். அரசாங்கத்தின் தனியொரு கிளைப் பிரிவாக இயங்கும் நீதித் துறையிலிருந்து அரசாங்கச் சேவை மாறுபட்டது என்றார் அவர். சிங்கப்பூரின் அரசாங்க செயல்முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கத்திற்கு அரசு ஊழியர்கள் சேவையாற்ற வேண்டும். எனவே, அரசாங்க ஊழியர்கள் அரசியல் நிலவரத் தையும் அரசியல் தலைமைத்து வத்தின் சிந்தனையையும் புரிந்திருக்க வேண்டும்.

அரசாங்கச் சேவை நடை முறைக்கு ஏற்பில்லாத கொள்கை களை வகுக்காமல், நல்ல ஆதரவு பெற்ற, நன்கு அமலாக்கக்கூடிய சீரிய கொள்கைகள் வகுப்பதை இதன்வழி உறுதிப்படுத்தலாம் என்றார் அவர். ஆயினும், "அர சாங்க ஊழியர்கள் அரசியல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்" என்றார் அவர். "அவர்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அல்லது எதிராக பிரசாரம் செய்யக்கூடாது.

கட்சி அரசியல் நோக்கங்களுக்காக அவர்கள் அரசாங்க வளங்களை அல்லது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அதோடு ஒரு பிரச்சினை அர சியல் சர்ச்சைக்குரியதாக இருக் கும் நிலையில் நடுநிலையுடன் அச்சமின்றி தங்களது கடமை களை நிறைவேற்றவும் தயங்கக் கூடாது," என்றார். இந்தக் காரணங்களால்தான் அரசாங்கச் சேவை அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர் களாகச் சேர அனுமதிக்கப்படு வதில்லை என்று திரு லீ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!