பெட்டி தீப்பிடித்ததால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகள் ஐவர் கீழே இறக்கப்பட்டு விசாரணை

இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் சாங்கி விமான நிலையத்திற்குத் திரும்பி வந்த சம்பவம் தொடர்பாக போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பாது காப்பு காரணங்களுக்காக அந்த விமானம் திரும்பி வந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL309 விமானம் இம்மாதம் 14ஆம் தேதி புறப்படுவதற்குத் தயாராக இருந்த வேளையில் இரவு 7 மணிக்கு போலிசுக்கு அழைப்பு சென்றது.

சிங்கப்பூரில் சமையல் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள வந்த இலங்கை ஆடவர்களுக்குச் சொந்தமான சமையல் தீயேற்றியை உள்ளடக்கிய பெட்டி ஒன்று அந்த விமானத்தில் ஏற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டதாகத் தெரி விக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் தீப்பற்றிய தாகவும் சரக்குக் கையாளும் 22 வயது ஆடவருக்கு அதனால் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் போலிசிடம் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!