மஞ்சள் நாடா தொண்டர்களுக்கு கூடுதல் பயிற்சி

மஞ்சள் நாடா சமூகத் திட்டப் பணியின் அடித்தளத் தொண்டூழி யர்கள், கைதிகளின் பிள்ளைகளில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பவர்களை அடை யாளம் காணவும் அந்த குடும்பங்களுக்குக் கூடுதல் சமூக ஆதரவு வழங்கவும் கூடிய விரைவில் பயிற்சி பெறுவார்கள் என்று உள் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று தெரிவித்தார். ஷெரட்டன் டவர்சில் நடை பெற்ற முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கான சமூகச் செயல் திட்டத்தின் (கேர்) வருடாந்தர பணித்திட்ட ஆய்வரங்கில் பேசிய திரு அம்ரின், மேம்படுத்தப்பட்ட திட்டப்பணியின் ஒரு பகுதியாகத் தொண்டூழியர்களுக்காகத் தொடங்கப்படும் புதிய திட்டங் களை அறிவித்தார்.

சமூக ஈடுபாட்டை விரிவு படுத்தி, அடுத்தடுத்த தலைமுறை குற்றம் புரிவதைக் குறைப்பதன் அவசியத்தை அவர் எடுத்துக் கூறினார். “முறையான குடும்ப ஆதரவும் சாதகமான வளரும் சூழலும் இல் லாத பிள்ளைகள், சமூக விரோதப் பழக்கங்களை வளர்த்துக் கொள் ளக்கூடிய உயர் அபாயத்தை அல் லது பள்ளிப் படிப்பைச் சமாளிப் பதில் சிரமங்களை எதிர்நோக்கக் கூடும்,” என்றார் அவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது. படம்: ஷெல்

20 Aug 2019

வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

இவ்வாண்டில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. பின்லாந்தின் எண்ணெய் நிறுவனமான நெஸ்ட் தனது எரிசக்தி புதுப்பிப்பு ஆலை விரிவாக்கத்தில் $2 பில்லியன் செய்யவிருக்கும் முதலீடும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் துறைமுக கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2019

சிங்கப்பூர் பொருளியல் இன்னும் மோசமான கட்டத்தை நெருங்கவில்லை