விசாக தினத்துக்கு ரயில், பேருந்துச் சேவை நேரம் நீட்டிப்பு

இம்மாதம் 21ஆம் தேதி விசாக தினத்தை முன்னிட்டு முன்னைய நாள் இரவில் ரயில், சில பேருந்து சேவைகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நேற்று வெளியிட்ட அறிக்கையில் வடக்கு= தெற்கு, கிழக்கு=மேற்கு, வட்டப் பாதை ஆகியவற்றுடன் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

இதன்படி கடைசி ரயில்கள் இரவு 11.30 மணிக்கும் மறுநாள் காலை 1.29 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும் என்று அது தெரிவித்தது. எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் அதன் வடக்கு=கிழக்கு, டௌன்டவுன் ஆகிய ரயில் சேவைகளுடன் செங்காங், பொங்கோல் இலகு ரயில் சேவைகளும் மே 20ஆம் தேதி அன்று சுமார் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கிறது. இந்த சேவை நீட்டிப்புக்கு ஏற்ப சில பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்படுவதாக இரு போக்குவரத்து நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!