மாற்றங்களைக் காண்பிக்கும் கண்காட்சி

கடந்த அரைநூற்றாண்டாக நடை பெற்று வரும் தேசிய தின அணி வகுப்புகளை தேசிய மரபுடைமைக் கழகம் ஆய்வு செய்து ஆவணப் படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த ஆய்வை கழகம் நடத்தியது. தேசிய தின அணிவகுப்பு கடந்த 50 ஆண்டுகளில் கண் டுள்ள மாற்றங்களை எடுத்துக் காட்டும் இந்த ஆய்வு, பொது மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்படுகிறது.

காலாங் வேவ் மால் கடைத் தொகுதியில் இந்தக் கண்காட்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை அடுத்து, பிடோக் பொது நூலகம், விலோசிட்டி இன் நொவீனா, ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் ஆகிய இடங்களுக்குக் கண்காட்சி இடம் மாறும். இறுதியில் திரும்பவும் காலாங் வேவ் மால் கடைத்தொகுதியைக் கண்காட்சி அலங்கரிக்கும். தேசிய தினம் வரை கண் காட்சியைப் பொதுமக்கள் அங்கு கண்டு களிக்கலாம். 1960களிலிருந்து தற்போது வரை பத்துப் பத்து ஆண்டு களாகக் கண்காட்சி பிரிக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூர் இவ்வாண்டு 50 வது தேசிய தின அணிவகுப்பை நடத்த இருக்கும் வேளையில் இந்தக் கண்காட்சியை நடத்துவது பொருத்தமானதொன்று எனக் கழகத்தின் கொள்கை மற்றும் சமூகப் பிரிவின் உதவி தலைமை நிர்வாகி எல்வின் டான் குறிப் பிட்டார்.

தேசிய தின அணிவகுப்பு தொடங்கிய காலகட்டத்தில் அதில் பங்கெடுத்த திரு ஹோங் செங் மாக் (இடம்), திரு பொன்னுசாமி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்