சர்க்கியூட் ரோடு கடையில் தீ

எண் 36 சர்க்கியூட் ரோடு முகவரியில் இருக்கும் 7-=இலவன் கடையில் நேற்று அதிகாலை நேரத்தில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதிகாலை 4.45 மணிக்குத் தனக்குத் தகவல் வந்ததாகவும் தீயணைப்பு வாகனம், இரண்டு சிவப்பு ரைனோ வாகனங்கள், ஆதரவு வாகனம், மருத்துவ வாகனம் எல்லாம் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் இந்தப் படை குறிப்பிட்டது. பத்து நிமிடங்களில் தீ அணைக்கப் பட்டதாக படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தீ மூண்டதை அடுத்து சுமார் 20 பேரை போலிஸ் அப்புறப்படுத்தியது. சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை. தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண் 36 சர்க்கியூட் ரோடு முகவரியில் செயல்படும் 7-இலவன் கடையில் மூண்ட தீ பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. படம்: டேவிட் பாட்டம்லே