மின்தூக்கிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனவா

சிங்கப்பூரில் மின்தூக்கிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மின்தூக்கிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அவற்றின் 28 ஆண்டு ஆயுட்காலம் முடிவதற்கு முன்பாகவே அவற்றை மாற்றுவது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் பல மின்தூக்கிச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை அடுத்து இக்கோரிக்கை இடம் பெற்றுள்ளது. அத்தகைய சம்பவங்களை அடுத்து கட்டட, கட்டுமான ஆணையம் தீவு முழு வதும் மின்தூக்கிகளைச் சரிபார்க்கும் பணியைத் துரிதப்படுத்தியது. மின்தூக்கி விதிமுறைகளை அது மறுபரிசீலனை செய்து வருகிறது. இது முடிந்ததும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மின் தூக்கிச் சட்டங்களுக்கான மாற்றங்கள் முன்வைக்கப்படும்.