கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து

சிராங்கூன் 'நெக்ஸ்' கடைத் தொகுதியில் செயல்படும் 'புராட்டா வாலா' கடையின் உரிமம் இரண்டு வார காலத்திற்கு ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையில் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதால் ஜூன் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 4ஆம் தேதி வரை உரிமம் ரத்து செய்யப்படுகிறது என்று தேசிய சுற்றுப்புற வாரியத் தின் இணையப்பக்கத்தில் வெளி யிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டது. அந்த புராட்டா வாலா கடை, கடந்த 12 மாதங்களில் 12 குற்றப் புள்ளிகளைப் பெற்றது. கரப்பான் பூச்சிகள் இல்லாமல் கடையைப் பராமரிக்கத் தவறியதற் காக மட்டும் அது ஆறு குற்றப் புள்ளிகளைப் பெற்றிருந்தது.

புராடா வாலாவுக்கு ஜூரோங் பாய்ண்ட், தெம்பனிஸ் மால், நெக்ஸ், ஜங்ஷன் 8, பிடோக் மால் ஆகிய ஐந்து கடைத்தொகு திகளில் கடைகள் இருப்பதாக அதன் இணையப்பக்கம் தெரி விக்கிறது. தெம்பனிஸ் ஸ்திரீட் 43 புளோக் 477ல் உள்ள வேறு மூன்று உணவுக்கடைகளின் உரிமமும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சிகள் காணப் பட்டதால் இந்த மூன்று கடைகளும் குற்றப்புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஓராண்டில் 12 அல்லது அதற்கு மேற்பட்ட குற்றப்புள்ளி களைப்பெறும் கடையின் உரிமம் இரண்டு வாரத்திலிருந்து 4 வாரம் வரை ரத்து செய்யப்படு கிறது. இப்படி உரிமம் ரத்து செய்யப்பட்ட கடையின் உரிமை யாளர்கள், அடிப்படை உணவுத் தூய்மை குறித்த பயிற்சியில் பங்கேற்பது அவசியம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!