பொதுநல நோக்குடன் கல்லீரல் தானம்

தானம் பெறு­ப­வர் யார் எனக் குறிப்­பி­டா­மல் பொதுநல நோக்­கத்தை மட்டுமே அடிப்­படை­யா­கக் கொண்டு சிங்கப்­பூ­ரில் முதல்­முறை­யா­கத் தான­ம­ளிக்­கப்­பட்ட கல்­லீ­ர­லு­டன் 16 வயது பெண் புத்­து­யிர் பெற்­றி­ருக்­கிறார். லிம் சி ஜியா­வுக்கு எட்டு வயதாக இருக்­கும்­போது, அவ­ருக்கு 'கிளை­கோ­ஜன் ஸ்டோரேஜ்' நோய் இருப்­ப­தா­கத் தெரிய வந்தது. இந்த அரிய மர­பி­யல் நோய் கல்­லீ­ரலைப் பாதிக்­கும்­போது கல்­லீ­ர­லில் கிளை­கோ­ஜன் திரண்டு, கல்­லீ­ரல் வீங்கிப் போகும். தனது மகளின் வயிறு அவளது அண்­ணனைப் போலவே துருத்­திக் கொண்­டி­ருப்­பதைக் கவ­னித்­த­தாக சி ஜியாவின் தாயார் திருமதி லிம் லாய் கும் கூறினார். லிம் சி ஜியாவின் அண்­ண­னுக்­கும் அதே நோய் இருந்தது. தற்போது 18 வய­தா­கும் ஜியாவின் அண்­ண­னுக்­குச் சென்ற ஆண்டு கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்­றிக­ர­மா­கச் செய்­யப்­பட்­டது.

சி ஜியா­வுக்­கும் கல்­லீ­ரல் தானம் தேவைப்­பட்­டது. அவர் மூன்று முதல் நான்கு ஆண்­டு­களுக்­கு ­முன்பு தேசிய காத்­தி­ருப்­போர் பட்­டி­ய­லில் சேர்க்­ கப்­பட்­டார். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 54 வயது பாது­கா­வல் அதிகாரி பீட்டர் லிம் கோக் செங் தானம் பெறு­ப­வர் யாரென்று குறிப்­பி­டா­ம­லேயே கல்­லீ­ரல் தானம் செய்ய முன்­வந்தார். இதனால் காத்­தி­ருப்­போர் பட்­டி­ய­லில் ஆக அதிக தேவை­யுள்ள நோயா­ளிக்கு அவரது கல்­லீ­ரலைப் பயன்­படுத்த முடியும். உயி­ரு­டன் இருக்­கும்­போதே கல்­லீ­ரலைத் தானம் அளிப்­ப­தற்­குப் பரிந்­துரைக்­கப்­படும் அதி­க­பட்ச வயதான 55 வயதை எட்­டு­வதற்­கு­முன் தனது கல்­லீ­ரலை அவர் தான­ம­ளிக்க விரும்­பினார். திரு லிம்மின் கல்­லீ­ரல் சி ஜியா­வுக்­குப் பொருத்­த­மாக இருந்தது. இவ்­வாண்டு மார்ச் 24ம் தேதி தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை­யில் சி ஜியா­வுக்­குப் பத்து மணிநேர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்­யப்­ பட்­டது.

பீட்டர் லிம் கோக் செங்கிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) கல்லீரல் தானம் பெற்ற லிம் சி ஜியா (இடக்கோடி), கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான பேராசிரியர் கிருஷ்ணகுமார் மாதவன், தேசியப் பல்கலைக்கழக குழந்தைகள் இரைப்பைக் குடலியல் பிரிவின் தலைவர், மூத்த ஆலோசகர் பேராசிரியர் குவாக் செங் ஹாக் (வலக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!