வீவக அடுக்கு மாடிச் சுவரில் ஏறியவர் மாயம்

அங் மோ கியோ­வில் வீவக அடுக்­கு­மா­டிக் கட்­ட­டம் ஒன்­றின் வெளிப்­பு­றத்­தில் 12வது மாடி­யி­லி­ருந்து 10வது மாடிக்கு ஆட­வர் ஒரு­வர் இறங்­கினார். நேற்று விடி­யற்­காலை­யில் நடந்த இந்தச் சம்ப­வம் குறித்து போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். இது­கு­றித்து அந்த அடுக்­கு­மா­டிக் கட்­ட­டத்­தில் வசிக்­கும் 40 வயது திரு­மதி லீ என்­ப­வர் கூறுகை­யில், "நள்­ளி­ரவு நேரம், நான் வர­வேற்­பறை­யில் செய்­தித்­தாள் படித்­துக்­கொண்­டி­ருந்­தேன். அப்­போது என் வீட்டு சமையலறைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. பக்­கத்து வீட்­டுக்­கா­ரர்­கள் துணி காயப்­போ­ட­லாம் என்று நினைத்­தேன். இருந்தா­லும், உறுதி செய்­வ­தற்­காக சமையலறைப் பக்கம் சென்று பார்த்­தேன். சன்­ன­லுக்கு வெளியே சட்டை அணி­யாத ஆட­வர் ஒரு­வர் அந்த­ரத்­தில் நிற்­பதைக் கண்டு அதிர்ந்­தேன். அவர் சன்­ன­லுக்கு அடி­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த துணி காயப்­போ­டப் பயன்­படும் குழாய்­களில் நின்று கொண்டி­ருந்தார்.

"வேகமாகச் சென்று உறக்­கத்­தில் இருந்த எனது கண­வரை எழுப்­பி­னேன். அந்த ஆட­வரைப் பார்ப்­ப­தற்கு அவ­ரும் என்­னு­டன் சமையலறைக்கு அவ­ச­ர­மாக ஓடி வந்தார். "அந்த ஆட­வரோ சன்­ன­லுக்கு வெளியே அப்­ப­டியே அதே நிலை­யில் அங்­கேயே நின்­றி­ருந்தார். அந்த ஆட­வரைப் பார்த்து, இங்கே என்ன செய்து கொண்­டி­ருக்­கிறாய் என்று நான் கேட்­ட­தற்கு, மன்­னிக்­க­வும், மன்­னிக்­க­வும் என்று பதில் கூறி­ய­வாறு அந்த ஆட­வர் கீழே இறங்கத் தொடங்­கினார். வேக­மாக இறங்­கிய அவர், கீழே 10வது மாடி­யில் இருந்த ஒரு வீட்­டிற்­குள் புகுந்து விட்­டார்," எனக் கூறினார். அந்த ஆட­வர் திரு­டனாக இருக்­கக்­கூடும் என்ற அச்­சத்­தில் போலிசை அழைத்­த­தாக திரு­மதி லீ கூறினார். போலிஸ் அந்த இடத்­திற்கு வந்து சேர்ந்த­போது அந்த ஆட­வர் அங்­கில்லை. அந்த வீட்­டில் இருந்து கள்ள சிக­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!