நிதிச் சுமை உள்ளவர்களுக்குதவும் ஆதரவுக் கரம்

சுதாஸகி ராமன்

மூன்று வயதில் கல்லீரல் தொடர்பான கோளாற் றால் அவதியுற்ற சுபாஷ் படுக்கையிலே பொழு தைக் கழித்த காலம் மாறி தற்போது ஆரோக் கியமாக ஓடி ஆடி விளையாடுவதற்கு சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் நல்வாழ்வு நிதி உதவி காரணமாக இருக்கிறது. கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கி 2013ல் மறுசீரமைக்கப்பட்ட இந்த நிதி, சுபாஷைப் போன்ற நோயாளிகளுக்கு உதவுவதோடு, உடற்குறையுடையோர், கல்விக்கு நிதி தேவைப் படுவோர் என்று பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கும் சிங்கப்பூரர்களுக்கு உதவுகிறது. ஃபுராமா ஹோட்டலில் நேற்று மதிய விருந் துக்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர் இந்தியர் சங்கம், இந்த நல்வாழ்வு நிதிக்கு மேலும் நிதி திரட்டியது. நிகழ்ச்சி யின் மூலம் சுமார் $50,000 நிதியைத் திரட்ட எண்ணிய சங் கம், இதுவரை சுமார் $105,000 யைத் திரட்டியிருக்கிறது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு இந்திரஜித் சிங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார். "அதிவேக வளர்ச்சி அடைந் திருக்கும் சிங்கப்பூரிலும் பொரு ளியல் சிரமங்களுக்கு ஆளாகும் மக்களுக்கு அவசர நிதி தேவைப் படுகிறது. இவர்களுக்கு உதவும் நோக்கில் எங்களின் உதவி நிதி அமையும்," என்று சங்கத்தின் தலைவர் திரு கே. கேசவபாணி நிகழ்ச்சியின்போது கூறினார்.

(இடமிருந்து) சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் திரு கே. கேசவபாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு இந்தர்ஜித் சிங், தொழிலதிபர் திரு முகம்மது அப்துல் ஜலீல். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!