வங்கிக் கொள்ளை: சந்தேகப் பேர்வழியிடம் $30,000 மீட்பு

ஸ்டாண்டர்ட் சார்ட்­டர்ட் வங்­கி­யில் கொள்ளையடிக்­கப் பட்­ட­தா­கக் கூறப்­படும் 30,000 வெள்­ளியை­ கைது செய்யப்பட்ட கனடா நாட்டவரிடம் இருந்து தாய்­லாந்து போலி­சார் பத்­தி­ர­மாக மீட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது. பேங்காக்­கில் நேற்று கைது­செய்­யப்­பட்ட ஹாலந்து வில்­லேஜ் கொள்ளைச் சம்பவ சந்­தே­கப் பேர்­வ­ழி­யான டேவிட் ஜேம்ஸ் ரோச் (படம்), பேங்காக்­கில் ஒரு விடு­தி­யில் தங்­கி­யி­ருந்தார். 26 வய­தான அந்த சந்­தே­கப் பேர்­வழி ஒரே பய­ணப் பையு­டன் அந்த விடு­தியை அடைந்தார்.

மத்­திய பேங்காக்­கில் ரட்­ச­தேவி வட்­டா­ரத்­தில் உள்ள அந்த விடு­தி­யில் தங்­கு­வ­தற்­காக அவர் முன்­ப­திவு எது­வும் செய்­ய­வில்லை. உணவு விடு­தியை அடைந்த போது டேவிட் மிக அமை­தி­யா­கக் காணப்­பட்­டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்­ன­தாக அங்கு இரண்டு நாட்­கள் மட்­டுமே தங்­கு­வ­தற்கு திட்டமிட்ட அவர், திடீ­ரென தங்­கும் நாட்­களை நீட்­டித்­தார். ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் தாய்­லாந்து போலி­சா­ரால் சுற்றி வளைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்­ட­தற்கு முன்­ன­தாக தாய்­லாந்து போலி­சார், ஜேம்ஸ் ரோச்சை அந்த விடுதி ஊழி­ய­ரி­டம் பேசிக்­கொண்­டி­ருந்த­போது கண்ட­தா­க­வும் அப்­போது அவரை சரி­யாக அடை­யா­ளம் தெரி­ய­வில்லை என்­றும் கூறினார். ஆனால் அங்­குள்ள பதி­வேட்­டில் அவ­ரது பெயர் பதி­வா­கி­யி­ருந்ததைக் கண்ட­தும்­தான் ஜேம்ஸ் ரோச் அங்கு தங்­கி­யி­ருப்­பதை அவர்­கள் உறுதி செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!