கள்ள சிகரெட்டுடன் லாரி பிடிபட்டது; ஐந்து பேர் கைது

சிங்கப்பூர் சுங்கத்துறையும் கடலோர போலிஸ் காவல்படையும் சேர்ந்து இரண்டு நாட்கள் எடுத்த நடவடிக்கையில் புதனன்று மொத்தம் ஐவர் கைதானார்கள். தீர்வை செலுத்தப்படாத சிக ரெட்டுகளைக் கையாண்டதன் தொடர்பில் கைதான அந்த ஐவரில் நால்வர் ஆடவர்கள், ஒருவர் பெண் என்று சிங்கப்பூர் சுங்கத் துறையும் கடலோர போலிஸ் காவல்படையும் சேர்ந்து விடுத்த கூட்டறிக்கை நேற்று தெரிவித்தது. அந்த நடவடிக்கையில் மொத்தம் 18,048 பாக்கெட் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இவை தொடர் பான மொத்த ஜிஎஸ்டி வரி $154,000 ஆகும். சிங்கப்பூர் சுங்கத்துறை அதி காரிகள் புதன்கிழமையன்று பிற் பகல் நேரத்தில் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர்.

அந்த லாரிக்குள் பல பெட்டி களில் தீர்வை செலுத்தப்படாத 15,960 பாக்கெட் சிகரெட்டுகள் இருந்தன. லாரியை ஓட்டி வந்த 56 வயது ஆடவர் கைதானார். லாரியும் கைப்பற்றப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய புலன்விசாரணையில் அந்த சிகரெட் ஒரு படகிலிருந்து அந்த லாரிக்குள் சாங்கி கிரீக்கில் ஏற்றப்பட்டது தெரியவந்தது. அந்தப் படகு கடலோர மீன்பிடி நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவாகியிருந்தது. உடனடியாக அதிகாரிகள் செயலில் இறங்கினர். வியாழக்கிழமை காலையில் அதி காரிகள் அந்த மீன் பண்ணையைச் சோதனையிட்டனர். இதர இரண்டு பண்ணைகளும் சோதனையிடப் பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!