அரசுத் துறை குறைபாடுகள் கவலை தருவதாக பாட்டாளிக் கட்சி கருத்து

அரசாங்கத் துறை செலவினத்திலும் ஆளுமையிலும் பல குறைபாடுகள் இருப்பதாக அண்மையில் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரியவந்திருப்பது, கவலைத் தரக்கூடிய பொதுமக்கள் தொடர்பான அம்சங்கள் என்றும் அதற்கு அரசாங்கம் போதிய அளவுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக கல்வி அமைச்சின் கீழ்த் திரும்பத்திரும்ப குறைபாடுகள் காணப்பட்டிருப்பது கவலைத் தருவதாக இருக்கிறது என்று அந்தக் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. தேசிய வளர்ச்சி அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றின் செயல்களில் காணப்படும் குறைபாடுகளையும் பாட்டாளிக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டது. வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர் களிடமிருந்து பதில் பெறுவதற்காக பல கேள்விகளை பாட்டாளிக் கட்சி தாக்கல் செய்யும் என்றார் கட்சியின் ஊடகக் குழுவின் துணைத் தலைவரும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினருமான லியோன் பெரேரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!