சாலைத் தடுப்பை மோதித் தள்ளி பேருந்தில் மோதிய வாகனம்

சாலைத் தடுப்பை இடித்துத் தள்ளி விட்டு நான்கு தடங்களைத் தாண்டி, எதிரே பய­ணி­களு­டன் வந்­து­கொண்­டி­ருந்த பொதுப் பேருந்து மீது மோதி பின் சாலைக்கு வெளி­யில் பாய்ந்தது ஒரு வாக­னம். நேற்­றுக் காலை­யில் யூனோஸ் லிங்க் சாலை­யில் இந்தச் சம்ப­வம் நிகழ்ந்தது. நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்­கும் காய­மில்லை.

மோதிய அந்த சிவப்பு நிற ஹோண்டா வாக­னத்­தின் ஓட்­டு­நர், சம்பவ இடத்­திற்கு வந்து சேர்ந்த அதி­கா­ரி­களி­டம் வாக்­கு­வா­தம் செய்து அவர்­களைத் தள்ளிவிட்டு பர­ப­ரப்­பேற்­படுத்­தினார். சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்பு அதி­கா­ரி­கள் மூன்று பேரு­டன் மருத்­துவ உத­வி­யா­ளர் ஒரு­வ­ரும் அந்த ஓட்­டு­ந­ரி­டம் நீண்ட நேர­மா­கப் பேசி சமா­தா­னப்படுத்­தி­னர்.

சிவப்பு நிற ஹோண்டா வாகனம் எதிர்த்திசையில் இருந்து அதிவேகமாகச் சென்றதாக அப்போது அந்த சாலையில் வாகனமோட்டிச் சென்ற திரு சுங் சியூ மெங் என்பவர் கூறினார். இது பற்றி சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை­யி­ன­ருக்கு காலை 7.30 மணிக்­குத் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் சம்பவ இடத்­திற்கு மருத்­துவ அவ­சர வாக­னம் ஒன்றை தாங்கள் அனுப்பி வைத்­த­தா­க­வும் குடிமைத் தற்­காப்­புப் படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

அதி­கா­ரி­களைத் தள்ளி விட்ட குற்­றத்­திற்­காக விபத்து ஏற்­படுத்­திய வாகன ஓட்­டு­நர் கைது ­செய்­யப்­பட்­ட­தாக போலிஸ் தெரி­வித்­தது. அர­சாங்க அதி­கா­ரியை வேலை செய்­ய­வி­டா­மல் வலுக்­கட்­டா­ய­மாக தடுத்த குற்­றத்­திற்­காக குறைந்தது 4 ஆண்டு சிறைத் தண்டனை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

யூனோஸ் லிங்க் சாலையில், சாலைத் தடுப்பை மோதித் தள்ளி விட்டு எதிரே வந்த பயணிகள் பேருந்தில் மோதி, சாலைக்கு வெளியில் பாய்ந்த சிவப்பு நிற ஹோண்டா வாகனம். படம்: எஸ்பிஎச்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!