சுடச் சுடச் செய்திகள்

பொருளியல் இறங்கினால் சமாளிக்க அரசாங்கம் தயார்

சிங்கப்பூரின் பொருளியல் இறங்குமுகமானால் அதைச் சமாளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரி வித்தார். பொருளியல் இறங்குமுகத்தின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து பலதரப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை அமல்படுத்து வது குறித்து பரிசீலிக்க அரசாங் கம் ஆயத்தமாக இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் பொருளியல் மந்தத் தில் விழுந்துவிடும் என்று அரசாங் கம் எதிர்பார்க்கவில்லை. இருந் தாலும் சில காலாண்டுகளில் பூஜ்ஜியத்திற்கு குறைந்த வளர்ச் சியே இருக்கும் வாய்ப்பு உள்ள தாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வளர்ச்சி முதல்பாதியில் இருந்த அளவுக்கு (2.1%) இருக் காது என்று வர்த்தக தொழில் அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வேலையின்மை விகிதம் அதி கரிப்பது, பொருளியல் வளர்ச்சி யின் வேகம் குறைந்திருப்பது, உலகப் பொருளியல் பலவீனமாக இருப்பது ஆகியவற்றின் தொடர் பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மன்றத்தில் நேற்றுப் பேசினார்.

சிங்கப்பூர் பொருளியல் மந் தத்தில் விழுந்துவிடுமா என்றும் அதன் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மரின் பரேட் குழுத்தொகுதி உறுப் பினர் சியா கியான் பெங் கேட்டு இருந்தார். சரியில்லாத பொருளியல் நில வரம் காரணமாக பாதிக்கப்பட் டுள்ள நிறுவனங்கள் ஏற்கெனவே அமலில் இருக்கும் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் தமது பதிலில் குறிப் பிட்டார். கடல் தொழில்துறைக்கான வெளிநாட்டு ஊழியர் தீர்வை அதிகரிப்பை அரசாங்கம் ஒத்தி வைத்திருப்பதை அமைச்சர் குறிப் பிட்டார். சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டு 1% முதல் 2% வரை வளரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. வர்த்தக தொழில் அமைச்சு இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான பொருளியல் முன் மதிப்பீடுகளை வரும் வெள் ளிக்கிழமை வெளியிடவிருக்கிறது. இந்த ஆண்டு பொருளியல் முன்னுரைப்புகளைப் பற்றி நவம்பர் மாதம் அரசாங்கம் தகவல்களை வெளியிடும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon