3,000 வேலைகளை உருவாக்கப் புதிய திட்டம்

சிங்கப்பூரில் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில் நுட்பர்கள் ஆகியோருக்கு மேலும் 3,000 வேலைகளை உருவாக்கும் புதிய வழிகாட்டித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துல்லியப் பொறியியல் துறையில் புதிய வளர்ச்சியடையும் துறைகளை அடையாளம் காண உதவும் அந்த வழிகாட்டித் திட் டத்தை வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் நேற்று வெளியிட்டார். உள்ளூரின் ‘மெய்பான்’ நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச் சியில் வழிகாட்டித் திட்டம் அறிமுகம் கண்டது. தயாரிப்புத் துறையில் முதல் முறையாக இடம்பெற்றுள்ள இந்தத் திட்டத்தைச் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தவிருக்கிறது.

இந்நிலையில் சிங்கப்பூர் பொருளியலில் துல்லியப் பொறி யியல் துறையின் பங்கு 2014ஆம் ஆண்டின் 8.8 பில்லியன் வெள்ளி யிலிருந்து 2020ஆம் ஆண்டில் 14 பில்லியன் வெள்ளிக்கு அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் இந்தத் துறையில் 94,000 பேருக்கு மேல் பணியாற்றுவார்கள். எதிர்காலத்தில் துல்லியப் பொறியியல் துறையின் அடித்தள மாக அமையும் உயர் மதிப்புள்ள நடவடிக்கைகளுக்கு மாறுவது வழிகாட்டித் திட்டத்தின் முக்கிய உத்தியாகும். இதில் தானியக்க முறைகள் புகுத்தப்படும். இந்த வகையில் ‘ஆய்வு, புத் தாக்கம், நிறுவனம் 2020’ எனும் திட்டத்தின் கீழ் தயாரிப்பு, பொறி யியல் துறையின் ஆய்வு மேம் பாட்டுக்கு ஏற்கெனவே சிங்கப்பூர் 3.2 பில்லியன் வெள்ளியை ஒதுக்கியிருக்கிறது. இதற்கிடையே புத்தாக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் துல்லியப் பொறியியல் துறை வழிகாட்டித் திட்டத்தின் இரண்டு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப் படும்.

மின்னிலக்கத் தொழிற்சாலை மாதிரிகளை உருவாக்குவது அவற்றில் ஒன்று. இதன் ஒரு பகுதியாக ‘ஏஸ்டார்’ சிங்கப்பூர் தயாரிப்புத் தொழில்நுட்பக் கழகத் திலும் நவீன மறுதயாரிப்பு, தொழில்நுட்ப நிலையத்திலும் தயாரிப்புத் தளங்கள் அமைக்கப் படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நடுத்தர நிறு வனங்களுக்கும் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப் படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’