ஏழு மாதம் காணாத சரிவில் நாணயம்

சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு ஏழு மாதத்திற்கு முந்திய சரிவுக்கு அருகில் நேற்று சென்றது. மூன் றாம் காலாண்டில் பொருளியல் சுருங்கியத்தைத் தொடர்ந்து நாணய மதிப்பு வீழ்ந்துள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் கொள்கையில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று நேற்றுக் காலை அறிவித்தபோது சற்று வலுவடைந்த நாணய மதிப்பு பின்னர் 0.4 விழுக்காடு இறங்கி ஓர் அமெரிக்க டாலருக்கு 1.3865 சிங்கப்பூர் வெள்ளி என்னும் நிலை யைத் தொட்டது. இது கடந்த மார்ச் 10ஆம் தேதி சிங்கப்பூர் நாணயம் பல வீனமடைந்த நிலவரத்துக்கு ஒப் பானது. ஜூலை மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப் பட்ட மூன்றாம் காலாண்டிற்கான பொருளியல் அதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் 4.1 விழுக்காடு சுருங்கியது.

பொருளியல் இவ்வாறு ஏமாற் றியபோதிலும் நாணய மதிப்பை ஏற்றுவது தொடர்பிலான கொள்கை யில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணை யம் அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து சில முதலீட்டாளர்கள் எடுத்த முடிவு நாணய மதிப்பை வலுவாக்கியது. ஆனால், சற்று நேரத்திலேயே சில முதலீட்டாளர்கள் விற்பனையில் இறங்கும் பழைய நிலைக்கு மாறினார்கள். அதனைத் தொடர்ந்து நாணய மதிப்பு சரிவைக் கண்டது.

இது தொடர்பாகக் கருத் துரைத்த சிங்கப்பூர் ஓசிபிசி வங்கியின் நாணயச் சந்தை உத்தி வகுப்பாளர் இம்மானுவல் இங், “மூன்றாம் காலாண்டின் ஏமாற்ற மான பொருளியல் நிலவரமும் கொள்கை அறிக்கையின் தாக்கங் களும் அமெரிக்க டாலர் மீண்டும் ஏற்றம் பெறும்போது அமெரிக்க டாலர்- சிங்கப்பூர் வெள்ளி நிலவரத்தில் மேலும் கடினத் தன்மையை ஏற்படுத்தும்,” என்றார். சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது சந்தை விகித அடிப்படை யிலான நாணயக் கொள்கையை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் மறுஆய்வு செய்வது வழக்கம். ஏப்ரல் மாத மறுஆய்வின் போது கொள்கை தளர்த்தப்பட் டது நாணயச் சந்தைகளை வியப் பில் ஆழ்த்தியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை